விமர்சனம் குறித்து கவலை இல்லை.. இந்திய அணியில் என் வேலை இது மட்டும்தான் – விராட் கோலி பேட்டி

0
1400

பாகிஸ்தான் அணிக்கு எதிரான சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் லீக் தொடரில் விராட் கோலியின் அபாரமான ஆட்டத்தால் இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

இந்த சூழ்நிலையில் இந்திய அணி வெற்றி பெற்ற விதம் குறித்து விராட் கோலி சில முக்கியமான கருத்துக்களை கூறியிருக்கிறார்.

- Advertisement -

சிறப்பாக செயல்பட்ட விராட் கோலி

இந்த போட்டியை பொறுத்தவரை பாகிஸ்தான் அணிக்கு தொடக்கம் ஓரளவு நன்றாக அமைந்தாலும், அதற்குப் பின்னால் வந்த வீரர்கள் ஆட்டத்தை சிறப்பாக பயன்படுத்திக் கொள்ள தவறியதால் பாகிஸ்தான் அணி இன்னிங்ஸ் முடிவில் 241 ரன்கள் மட்டும் குவித்தது. அதில் அதிகபட்சமாக சவுத் சகீல் 62 ரன்கள் குவித்தார். கேப்டன் முகமது ரிஸ்வான் 46 ரன்கள் குவிக்க தொடக்க ஆட்டக்காரர் பாபர் அசாம் 23 ரன்னில் வெளியேறினார்.

இதற்குப் பின்னர் வெற்றி இலக்கை நோக்கி இந்திய அணி களம் இறங்கியது. தொடக்கம் இந்திய அணிக்கு நன்றாக அமைந்த நிலையில், அதற்கு பின்னர் களம் இறங்கிய விராட் கோலி, இந்த முறை தனது அபாரமான ஆட்டத்தினை வெளிப்படுத்தினார். பாகிஸ்தான் அணிக்கு எதிராக எப்போதுமே சிறப்பாக விளையாடும் விராட் கோலி இந்த முறையும் அதனை நிரூபிக்க தவறவில்லை. இறுதியாக 111 பந்துகளை எதிர்கொண்டு 7 பவுண்டரிகள் அடித்து 100 ரன்கள் குவிக்க இந்திய அணி 244 ரன்கள் குவித்து வெற்றி பெற்றது.

- Advertisement -

என் வேலை இதுதான்

இந்த சூழ்நிலையில் இது குறித்து விராட் கோலி கூறும் போது “உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் ஒரு முக்கியமான ஆட்டத்தில் தகுதி பெறுவதற்கு என்னால் சிறப்பாக செயல்பட முடிந்ததில் மகிழ்ச்சி. தொடக்கத்தில் ரோஹித் சர்மா சிறப்பாக ஆடினார். கடந்த ஆட்டத்தில் நாங்கள் கற்றுக்கொண்டு புரிந்து கொள்ள வேண்டியிருந்தது. அதிக ரிஸ்க் எடுக்காமல் சுழற் பந்துவீச்சாளர்களுக்கு எதிராக மிடில் வரிசை ஓவர்களை கட்டுப்படுத்துவதே எனது வேலை. இறுதிக்கட்டத்தில் ஸ்ரேயாஸ் ஐயர் வேகத்தை அதிகரித்தார். மேலும் இந்த போட்டியில் எனது இயல்பான ஆட்டத்தை விளையாட எனக்கு அனுமதி கிடைத்தது போன்ற உணர்வு இருந்தது.

இதையும் படிங்க:அவர பத்தி என்ன சொல்றது.. விராட் கோலியின் ஆசை இந்த ஒரு விஷயம் மட்டும்தான் – ரோஹித் சர்மா பேட்டி

என் ஆட்டம் குறித்து எனக்கு நல்ல புரிதல் உள்ளது. வெளிப்புறத்தில் வரும் சத்தத்தை தவிர்த்து நான் என்ன செய்ய வேண்டும் என்பதில் தெளிவாக இருக்கிறேன். எதிர்பார்ப்புகள் அதிகம் இருக்கும், ஆனால் நிகழ்காலத்தில் அணிக்கு என்ன தேவையோ அதை செயல்படுத்துவதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி. என் முக்கிய வேலை ஒவ்வொரு பந்தையும் 100 சதவீதம் கவனத்தை செலுத்தி விளையாடுவது மட்டுமே. இந்த போட்டியில் கில் சிறப்பாக விளையாடினார். அவர்தான் உலகின் நம்பர் ஒன் பேட்டர் என்பதற்கு காரணம் பவர் பிளேவில் 60 முதல் 70-ங்கள் எடுக்க வேண்டும். அதை அவர் சிறப்பாக செய்கிறார். உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் 36 வயதில் எனக்கு இந்த அனுபவம் நன்றாக உள்ளது. எனவே அடுத்த போட்டியிலும் சிறப்பாக செயல்படுவோம்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -