இந்திய கிரிக்கெட் அணி அடுத்ததாக ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டிராபி தொடரில் விளையாட இருக்கிறது. இதற்காக இரண்டு அணி வீரர்களும் தற்போது மிக தீவிரமான முறையில் தயாராகி வருகின்றனர்.
இந்த சூழ்நிலையில் ஆஸ்திரேலியா அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் ஜோஸ் ஹேஸில்வுட் நியூசிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணியின் தோல்வி குறித்து சில முக்கிய கருத்துகளை கூறியிருக்கிறார்.
இந்தியா ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடர்
இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்வதற்கு முன்னதாக சொந்த மண்ணில் நியூசிலாந்து அணிக்கு எதிராக மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடிய நிலையில், 3 போட்டிகளிலும் தோல்வியடைந்தது. இது இந்திய அணிக்கு அவர்களது தன்னம்பிக்கையிலும் மற்றும் அணித்தேர்விலும் பெரிய அழுத்தத்தை உண்டாக்கி இருக்கக்கூடும். மேலும் இது அணியின் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் பேட்டிங் ஃபார்மேல் இல்லாமல் இருப்பது இந்திய அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்த சூழ்நிலையில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டிக்கு தகுதி பெற வேண்டுமானால் இந்திய அணி அடுத்த ஐந்து டெஸ்ட் போட்டிகளிலும் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இந்த சூழ்நிலையில் ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர பந்துவீச்சாளர் ஹேசில்வுட் இந்திய அணி தோல்வி அடைந்தது அவர்களது நம்பிக்கையை ஒரு விதத்தில் பாதிப்படைய வைத்திருந்தாலும் அது தூங்கிக் கொண்டிருந்த ராட்சசனை எழுப்புவதற்கு சமம் என்று தனது கருத்துக்களை கூறியிருக்கிறார்.
தூங்கிக் கொண்டிருந்த ராட்சசனை எழுப்புவதற்கு சமம்
இதுகுறித்து அவர் விரிவாக கூறும்போது “இந்திய அணி அடைந்திருக்கும் தோல்வி தூங்கிக் கொண்டிருக்கும் ராட்சசனை எழுப்புவதற்கு சமமாகும். 3-0 என்ற கணக்கில் எளிதாக வெற்றி பெறுவதை விட 3-0 என்ற கணக்கில் தோல்வி நல்லதாகும். இதனால் இந்திய அணியின் நம்பிக்கை சற்று பாதித்திருக்கலாம். இது எங்களுக்கு ஒரு நல்ல விஷயம். இந்திய அணியில் பலர் இங்கு விளையாடி இருக்கின்றனர் ஆனால் அதில் ஒரு சில பேட்ஸ்மேன்கள் புதிதாக இருக்கின்றனர். எனவே அவர்களது எதிர்பார்ப்பு என்ன என்பது நிச்சயம் அற்றதாகவே பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க:3-0 ஒயிட் வாஸ் ஆகியும்.. ஆஸி தொடருக்கு பிசிசிஐ எடுத்த முடிவு ஏற்க முடியாது – அனில் கும்ப்ளே விமர்சனம்
நீங்கள் அது குறித்து அதிகம் பார்க்க முடியாது என்று நினைக்கிறேன். இருப்பினும் இந்திய அணியின் தோல்வி முடிவு ஒரு வகையில் நமக்கு நல்லதாகவே அமையும். நியூசிலாந்து அணியினர் இந்த தொடரில் சிறப்பாக விளையாடினர். இந்தியாவில் 3-0 என்ற கணக்கில் வெற்றி பெறுவது நம்ப முடியாத விஷயமாகும். தொடரின் ஒவ்வொரு போட்டியில் வெற்றி பெறுவது என்பது கடினமான விஷயம்” என்று கூறியிருக்கிறார்.