“பாகிஸ்தானால் எதையும் மாத்த முடியாது.. எங்களுக்கு ரொம்ப முக்கியம்!” – கவாஸ்கர் மற்றும் ஹர்பஜன் சிங் இருவரும் கூட்டு அறிக்கை!

0
630
Gavskar

13 வது ஒரு நாள் கிரிக்கெட் உலகக் கோப்பைத் தொடர் நாளை இந்தியாவில் குஜராத் அகமதாபாத் மைதானத்தில் துவங்குகிறது. முதல் போட்டியில் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதிக் கொள்கின்றன!

இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் அக்டோபர் எட்டாம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஆஸ்திரேலியா அணியை எதிர்த்து விளையாட இருக்கிறது.

- Advertisement -

இந்த உலகக் கோப்பை தொடரில் மிக முக்கியமான போட்டியாக அட்டவணையில் அமைந்திருக்கிற இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதிக் கொள்ளும் போட்டி அக்டோபர் 14ஆம் தேதி குஜராத் அகமதாபாத் மைதானத்தில் நடக்கிறது.

ஆசியக் கோப்பைக்கு வருவதற்கு முன்னால் பாகிஸ்தான் அணி மிகவும் அபாயகரமான அணியாக தெரிந்தது. வந்து பங்கேற்ற பின்னால் பாகிஸ்தான் அணி மிகவும் பலவீனமான அணியாகத் தெரிகிறது.

இது பாகிஸ்தான் கிரிக்கெட் நிர்வாகத்திற்கும் அதன் ரசிகர்களுக்கு மட்டும் இல்லாமல் எதிர்த்து விளையாடக்கூடிய அனைத்துமே பெரிய சிக்கல். ஏனென்றால் பாகிஸ்தான் எப்பொழுது என்ன செய்யும்? என்று தெரியாது. தொடர்ச்சியாக கிரிக்கெட் வரலாற்றில் கணிக்க முடியாத அணியாகவே இதுவரை இருந்து வருகிறது.

- Advertisement -

இந்தியா பாகிஸ்தான் போட்டி குறித்து பேசி உள்ள சுனில் கவாஸ்கர் கூறும் பொழுது “நாங்கள் உலகக் கோப்பையை வெல்ல வேண்டும். ஆனால் எங்களுக்கு இந்தியா பாகிஸ்தான் போட்டி மிகவும் முக்கியமானது. எதிர்பார்ப்புகளின் அடிப்படையில் சாமானிய ரசிகர்களிடம் கேட்டால் இதைத்தான் சொல்லுவார்கள். எங்களுக்கு வெல்ல உலகக் கோப்பை உள்ளது. இந்தியா இந்த உலகக் கோப்பையில் பேவரைட் என்பதில் எந்த சந்தேகமும் கிடையாது!” என்று கூறியிருக்கிறார்.

இது குறித்து ஹர்பஜன்சிங் பேசும் பொழுது ” இந்தியாவுடன் ஆன போட்டியில் பாகிஸ்தான் முன்னணியில் இருப்பதாக நான் பார்க்கவில்லை. பாகிஸ்தான் ஒரு நல்ல டி20 அணி. ஆனால் ஆசிய கோப்பை மற்றும் பயிற்சி போட்டியில் பார்த்ததில் அவர்கள் ஒருநாள் கிரிக்கெட்டில் நல்ல அணியாகத் தெரியவில்லை. பாகிஸ்தானுக்கு எதிரான இந்தியாவின் உலகக் கோப்பை சாதனையை அவர்களால் எதுவும் இந்த முறையும் செய்ய முடியாது!” என்று கூறி இருக்கிறார்!