இந்தியா நெட் ப்ராக்டீஸ் பண்ண பாகிஸ்தான் பவுலர்களா? – ரோகித் சர்மா பத்திரிகையாளர் சந்திப்பில் சுளீர் பதில்!

0
876
Rohit

இந்திய பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர்கள் தாண்டி உலக கிரிக்கெட் ரசிகர்களும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த இந்தியா பாகிஸ்தான் மோதும் போட்டி நாளை ஆசியக் கோப்பையில் நடக்க இருக்கிறது!

கடந்த ஒரு தசாப்தமாக இரு அணிகளும் இரு அணிகளுக்கு இடையே ஆன நேரடியான போட்டிகளில் விளையாடாமல் இருக்கின்ற காரணத்தினால், இந்தியா பாகிஸ்தான் போட்டிக்கு வழக்கமாக இருக்கும் எதிர்பார்ப்பை விட இரு மடங்கு எதிர்பார்ப்பு நிலவுகிறது.

- Advertisement -

மேலும் சரிவில் இருந்த பாகிஸ்தான் கிரிக்கெட் பாபர் ஆஸம் கேப்டனாக பொறுப்பேற்று வந்ததற்கு பிறகு மேல் எழுந்து வந்திருக்கிறது. மேலும் முதல் முறையாக 2021 ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பையில் உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியை பாபர் தலைமையிலான பாகிஸ்தான் வீழ்த்தி இருந்தது.

இந்த காரணிகள் எல்லாம் சேர்ந்து இந்தியா பாகிஸ்தான் மோதும் போட்டிக்கு மிகப்பெரிய சந்தை மதிப்பை வழங்கி இருக்கிறது. மேலும் இரு நாட்டு ரசிகர்களும் இந்த போட்டிக்குள் மிகவும் உணர்வுபூர்வமாக பிணைந்து இருக்கிறார்கள்.

நாளை போட்டி நடைபெறுகின்ற காரணத்தினால் இரு அணியின் கேப்டன்களும் பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தி வருகிறார்கள். இந்த வகையில் இந்திய கேப்டன் ரோஹித் சர்மா பத்திரிக்கையாளர் சந்திப்பில் பல கேள்விகளுக்கு வெளிப்படையாக அவரது பாணியில் பதில் அளித்து பேசி இருக்கிறார். பாகிஸ்தான் அணியின் வேகப்பந்துவீச்சு தாக்குதல் குறித்து கேட்ட பொழுது அவர் சுவாரசியமான பதில் ஒன்றை கூறி இருக்கிறார்.

- Advertisement -

இதுகுறித்து இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா கூறும் பொழுது “இதோ பாருங்கள் எங்களிடம் வலைப்பயிற்சியில் ஷாகின், நசீம், ரவுப் இல்லை. எங்களிடம் இருக்கும் பந்துவீச்சாளர்களை வைத்து பயிற்சி செய்கிறோம். அவர்கள் அனைவரும் தரமான பந்துவீச்சாளர்கள். அவர்களை நாளை எதிர்த்து விளையாடுவதற்கு நாங்கள் எங்களது அனுபவத்தை பயன்படுத்த வேண்டும்.

எங்களுடைய ஆறு பந்துவீச்சாளர்களும் சிறந்த பந்துவீச்சாளர்கள். பும்ரா அயர்லாந்தில் சிறப்பாக இருந்தார் தற்போதைய பயிற்சி முகாமிலும் சிறப்பாக இருந்தார்.இது எங்களுக்கு ஒரு நல்ல அறிகுறி. எங்களுடைய பிரதான மூன்று வேகப் பந்துவீச்சாளர்களும் நல்ல நிலையில் இருக்கிறார்கள். இது எங்களுக்கு மிக மிக நல்ல அறிகுறி.

போட்டி குறித்து மக்கள் பேசுவதற்கு நிறைய இருக்கிறது. ஒரு அணியாக நாங்கள் எதிரணிக்கு எதிராக எப்படி சிறப்பாக செயல்படுவது என்று மட்டும்தான் பார்க்க முடியும். எங்களுக்கு உதவப் போவது எதுவென்றால் நாங்கள் களத்தில் செய்கின்ற சரியான விஷயங்கள்தான்!” என்று கூறி இருக்கிறார்!