உலக கிரிக்கெட்

யார் சொன்னா.. பாபர் அசாமை டீமை விட்டு தூக்கிட்டோம்னு.. உண்மையில் நடந்தது இதுதான்- பாகிஸ்தான் துணை பயிற்சியாளர் பேட்டி

பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நாளை பாகிஸ்தானின் முல்தானில் நடைபெற உள்ளது. இந்த டெஸ்ட் போட்டியில் எதிர்பாராத விதமாக பாகிஸ்தான் அணியின் நட்சத்திர கிரிக்கெட் வீரர் பாபர் அசாம் நீக்கப்பட்டிருக்கிறார்.

- Advertisement -

இந்த சூழ்நிலையில் பாகிஸ்தான் அணியின் உதவி பயிற்சியாளரான அசார் மகமூத் பாபர் அசாம் நீக்கப்பட்டதற்கான முக்கிய காரணம் குறித்து கூறியிருக்கிறார்.

இங்கிலாந்து பாகிஸ்தான் டெஸ்ட் தொடர்

இங்கிலாந்து கிரிக்கெட் அணி பாகிஸ்தானின் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வரும் நிலையில் முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி குறிப்பிடத்தக்க வெற்றியை பெற்று தற்போது இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு தயாராகி வருகிறது. காயத்தால் சிறிது காலம் இங்கிலாந்து அணியில் விலகி இருந்த கேப்டன் பென் ஸ்டோக்ஸ் இரண்டாவது போட்டியில் மீண்டும் இங்கிலாந்து அணிக்காக விளையாட காத்திருக்கிறார்.

இந்த சூழ்நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் நட்சத்திர கிரிக்கெட் வீரரான பாபர் அசாம் இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் 30 ரன்களும், இரண்டாவது இன்னிங்ஸில் 5 ரன்களும் குவித்த நிலையில் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அவரது பெயர் நீக்கப்பட்டு இருப்பதால் மோசமான பேட்டிங் ஃபார்ம் காரணமாக அவர் நீக்கப்பட்டிருக்கிறார் என்ற செய்தி தற்போது வைரலாகி வருகிறது. இந்த சூழ்நிலையில் பாகிஸ்தான் அணியின் உதவி பயிற்சியாளர் அசார் மகமூத் பாகிஸ்தான் அணி இதற்குப் பிறகு தொடர்ச்சியான போட்டிகளில் விளையாட உள்ளதால் பாபர் அசாமுக்கு ஓய்வு அளிக்கப்பட்டிருக்கிறது என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -

பாபர் அசாம் நீக்கப்பட்டதற்கான காரணம்

இதுகுறித்து அவர் பிரிவாக கூறும்போது “அவர் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் நீக்கப்படவில்லை அவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டிருக்கிறது. கடந்த சில மாதங்களில் நிறைய போட்டிகள் நடந்துள்ளது என்பதை நிர்வாகமும் தற்போது புரிந்து கொண்டுள்ளது. மனதளவில் நீங்கள் வலிமையானவர் என்று கூறினாலும் எண்ண ஓட்டங்கள் எவ்வாறு உள்ளது என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும்.

இதையும் படிங்க:4 ரன் 5 விக்கெட்.. இந்திய அணியை கைவிட்ட பாகிஸ்தான்.. செமி பைனலில் நியூசி.. மகளிர் டி20 உலக கோப்பை

அவர் இரண்டாவது போட்டியிலும் விளையாட தயாராக இருந்தார். ஆனால் அவருக்கு தகுந்த ஓய்வு கொடுக்கப்பட்டு மீண்டும் புத்துணர்ச்சியோடு வரவேண்டும் என்று பாகிஸ்தான் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. ஏனென்றால் இதற்குப் பிறகு அடுத்த ஆண்டு ஏப்ரல் வரை பாகிஸ்தான் அணிக்கு தொடர்ச்சியாக போட்டிகள் உள்ளது. பாபர் அசாம் நம்பர் ஒன் வீரர் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அவரது பேட்டிங் நுட்பம் மற்றும் திறன் ஆகியவை சந்தேகத்திற்கு இடமின்றி சிறப்பாக இருக்கும். இதற்குப் பிறகு அவர் நிறைய போட்டிகளில் விளையாட உள்ளதால் அவருக்கு ஓய்வு அளிக்க வேண்டும் என்று இந்த முடிவை நிர்வாகம் மேற்கொண்டுள்ளது” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -
Published by