“இவர பாகிஸ்தான் கூட விளையாட விட்டா ஆஸி கூட உலக கோப்பையில் தோப்பிங்க!” – எச்சரிக்கும் இந்திய முன்னாள் நட்சத்திர வீரர்!

0
292
ICT

இந்திய அணி நாளை மறுநாள் ஆசியக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது சுற்றில், தனது முதல் போட்டியில் பாகிஸ்தான் அணியை எதிர்த்து, இலங்கை கொழும்பு மைதானத்தில் விளையாட இருக்கிறது!

இந்த இரு அணிகளும் ஏற்கனவே இந்த தொடரின் முதல் சுற்றில் மோதிக்கொண்ட பொழுது, டாஸ் வென்று இந்தியா மட்டும் முதலில் பேட்டிங் செய்திருக்க, மழையின் காரணமாக போட்டி அந்த இடத்திலேயே டிரா என அறிவிக்கப்பட்டது.

- Advertisement -

பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியின் போது இந்திய பேட்டிங் டாப் ஆர்டர் மொத்தமாக சரிந்தது. ரோகித் சர்மா, சுப்மன் கில், விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர் என 66 ரன்களுக்கு நான்கு விக்கெட்டுகளை இழந்தது.

இதற்குப் பிறகு கே எல் ராகுல் அணியில் இல்லாததால் இடம் பெற்ற விக்கெட் கீப்பர் இஷான் கிஷான் மற்றும் ஹர்திக் பாண்டியா இருவரும் அணியை நெருக்கடியில் இருந்து மீட்டு வந்து நல்ல நிலையில் நிறுத்தினார்கள்.

தற்பொழுது பாகிஸ்தான் அணிக்கு எதிரான இரண்டாவது சுற்றுப் போட்டிக்கு கே எல் ராகுல் உடன் தகுதி பெற்று மீண்டும் இந்திய அணிக்கு திரும்பி இருக்கிறார். இந்த நிலையில் யாரை நீக்கி அவரை அணியில் தேர்ந்தெடுப்பது? என்கின்ற குழப்பம் நிலவுகிறது.

- Advertisement -

தற்பொழுது இது குறித்து பேசி உள்ள இந்திய அணியின் முன்னாள் வீரர் முகமத் கைப் ” ராகுல் மற்றும் ஸ்ரேயாஸ் இருவரும், இந்திய மிடில் ஆர்டரின் முதுகெலும்பு என்பதையும், அவர்கள் இருவருக்கும் ஆட்ட நேரம் தேவை என்பதையும் ராகுல் டிராவிட் உணர்ந்து இருப்பார். இஷான் கிஷான் நன்றாக விளையாடினார். அணிக்குள் போட்டி இருப்பது நல்லது.

இருந்தாலும் கூட இஷான் கிஷான் நல்ல பேட்டிங் ஃபார்மில் இருக்கும்போது அவரை வெளியில் வைப்பதால் எந்த பிரச்சனையும் கிடையாது. ஏனென்றால் பேட்டிங்கில் ஐந்தாவது இடத்தில் ராகுல் பேட்டிங் செய்வதை டிராவிட் விரும்புவார். ஐந்தாமிடத்தில் ராகுல் நல்ல செயல் திறனை காட்டி இருக்கிறார்.

மேலும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக உலகக்கோப்பை முதல் போட்டியில் விளையாடும் பொழுது, ராகுலும் ஸ்ரேயாசும் ஆட்ட நேரத்தை பெற்றிருப்பது அவசியம்.

ராகுல் மற்றும் ஸ்ரேயாஸ் இருவரும் காயத்திலிருந்து திரும்பி வருகிறார்கள். எனவே அவர்கள் எவ்வளவு விளையாட வேண்டும்? போட்டிக்கு முன்பாக அவர்கள் எவ்வளவு பயிற்சியில் ஈடுபட வேண்டும்? என்பது குறித்தான தெளிவுகள் இருக்க வேண்டும். அதற்காகத்தான் கூடவே பயிற்சியாளர்கள் இருக்கின்றார்கள்!” என்று கூறியிருக்கிறார்!