எதிரணியாக இருந்தாலும் பாராட்ட வேண்டும்.. பாகிஸ்தான் வீரர் அதிரடி சதம்… அபிஷேக் சர்மா போராட்டம் வீண்… எமர்ஜிங் ஆசியகோப்பை பைனலில் பாகிஸ்தான் ஏ அணி வெற்றி!

0
2467

எமர்ஜிங் ஆசியகோப்பை பைனலில் இந்தியா ஏ அணியை 224 ரன்களுக்கு ஆல் அவுட் செய்து, 128 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றது பாகிஸ்தான் ஏ அணி.

எமர்ஜிங் ஆசியகோப்பை தொடரின் பைனலில் பாகிஸ்தான் ஏ மற்றும் இந்தியா ஏ இரு அணிகளும் மோதின. போட்டியில் பாகிஸ்தான் ஏ அணி முதலில் பேட்டிங் செய்தது.

- Advertisement -

துவக்க வீரர்கள் சயிம் ஆயுப் மற்றும் பர்கான் இருவரும் களமிறங்கினர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 121 ரன்கள் குவித்தது. செய்யும் 59 ரன்களும், ஃபர்கான் 65 ரன்களும் குவித்து ஆட்டம் இழந்தனர். அடுத்து வந்த ஓமர் யூசுப் 35 ரன்கள் அடித்து வெளியேறினார்.

அதிரடியாக விளையாடிய தாயப் தாகிர் 71 பந்துகளில் 108 ரன்கள் குவித்தார். இதில் 12 பவுண்டரிகளும் நான்கு சிக்சர்களும் அடங்கும். கடைசியில் வந்த முபாஷிர் கான் 35 ரன்கள் அடித்துக் கொடுத்து அவுட் ஆனார்.

பாகிஸ்தான் அணி 50 ஓவர்கள் முடிவில் எட்டு விக்கெட்டுகள் இழப்பிற்கு 352 ரன்கள் குவித்து வலுவான நிலையை பெற்றது. இந்திய அணி சார்பில் அதிகபட்சமாக ராஜ்வர்தன் மற்றும் ரியான் பராக் இருவரும் தலா இரண்டு விக்கட்டுகளை கைப்பற்றினார்.

- Advertisement -

அடுத்த களம் இறங்கிய இந்திய அணிக்கு துவக்க ஜோடி சாய் சுதர்சன் மற்றும் அபிஷேக் சர்மா இருவரும் சேர்ந்து 64 ரன்கள் சேர்த்தனர். இதில் சாய் சுதர்சன் 29 ரன்களுக்கு அவுட் ஆனார். அடுத்து வந்த நிக்கின் ஜோஸ் 11 ரன்கள் அடித்து வெளியேறினார்.

அபாரமாக ஆடிய அபிஷேக் ஷர்மா வெறும் 51 பந்துகளில் 5 பவுண்டரிகள் ஒரு சிக்சர் உட்பட 61 ரன்கள் அடித்து ஆட்டம் இழந்தார். மற்றொரு முனையில் கேப்டன் யாஷ் துல் 41 பந்துகளில் நான்கு பவுண்டரிகள் உட்பட 39 ரன்கள் அடித்து அவுட் ஆனார்.

அதன் பிறகு வந்த இந்திய அணி பேட்ஸ்மேன்கள் வரிசையாக தங்களது விக்கெட்டுகளை பறிகொடுக்க, 40 ஓவர்களில் 224 ரன்கள் மட்டுமே அடித்து ஆல் அவுட் ஆனது இந்தியா ஏ அணி. இதன் மூலம் 128 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற பாகிஸ்தான் ஏ அணி எமர்ஜிங் ஆசியகோப்பையை கைப்பற்றியது.