பாக் 252 ரன்.. இலங்கை 252 ரன்.. ஆனால் பாகிஸ்தான் தோல்வி.. ஆசிய கோப்பையில் டிவிஸ்ட்.. காரணம் இதோ..!

0
5234
Asia cup

நேற்று இலங்கை பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே ஆசியக் கோப்பை தொடரில் விறுவிறுப்பான போட்டி ஒன்று நடந்து முடிந்தது!

இந்தப் போட்டியில் கடைசி இரண்டுபந்துகளுக்கு ஆறு ரன்கள் தேவை என்ற நிலையில், இலங்கை அணியின் அசலங்கா 6 ரன்கள் எடுத்து கடைசிப் பந்தில் அணியை வெற்றி பெற வைத்தார்.

- Advertisement -

இதன் காரணமாக ஆசியக் கோப்பையில் மிக அதிகபட்சமாக 16வது முறையாக இலங்கை இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்று இருக்கிறது. மேலும் நடப்பு ஆசிய சாம்பியனாக இலங்கை அணியே இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

நாளை மறுதினம் கொழும்பு பிரேமதாசா மைதானத்தில் இந்தியா மற்றும் இலங்கை அணிகள் 16வது ஆசிய கோப்பையின் இறுதி போட்டியில், சாம்பியன் பட்டத்திற்காக மோதிக்கொள்ள இருக்கிறார்கள்.

நேற்று இலங்கை பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டியில் 42 ஓவர்களுக்கு பாகிஸ்தான் அணி 252 ரன்கள் எடுத்தது.

- Advertisement -

இலக்கைத் தொடர்ந்து விளையாடிய இலங்கை அணியும் 252 ரன்கள் எடுத்தது. இரண்டு அணிகளின் ஸ்கோரும் சமநிலையில்தான் இருந்தது. இந்த நிலையில் இலங்கை அணி வெற்றி பெற்றது, பலருக்கும் குழப்பமாக இருந்து வருகிறது.

இதில் நடந்தது என்னவென்றால், போட்டி ஆரம்பிப்பதற்கு முன்பாகவே 45 ஓவர்கள் என்று முடிவு செய்யப்பட்டது. இதே போட்டி 45 ஓவர்கள் நடைபெற்று இருந்தால் இந்த குழப்பம் நடந்திருக்காது. போட்டிக்கு நடுவே மழை மீண்டும் குறுக்கிட்ட காரணத்தினால் 42 ஓவர்கள் என்று மாற்றப்பட்டது.

இப்படி போட்டி நடந்து இடையில் மழையினால் நேரத் தாமதம் ஆனால், ஒரு அணி எடுக்கும் ஸ்கோர், டக்வொர்த் லீவிஸ் விதிப்படி பார்த்து அதற்குத் தகுந்தபடி இலக்கு தரப்படும்.

நேற்று இதே முறையில்தான் 42 ஓவர்களுக்கு 252 ரன்கள் என்று இலங்கைக்கு டக்வொர்த் லீவிஸ் விதிப்படி இலக்கு தரப்பட்டது. தரப்பட்ட இலக்கும் பாகிஸ்தான் அடித்த ஸ்கோரும் ஒன்றாக இருந்த காரணத்தினால் ரசிகர்கள் குழப்பம் அடைந்து விட்டார்கள். ஆனால் அதற்குப் பின்னால் உள்ள காரணம் இதுதான்!