இலங்கை , பாகிஸ்தான் டெஸ்ட் தொடரில் சூதாட்டம்.. விசாரிக்க ஐசிசி க்கு அழைப்பு

0
97

இலங்கை கிரிக்கெட் வாரிய நிர்வாகிகளிடையே அதிகார போர் ஏற்பட்டு உள்ளது. ஒரு காலத்தில், ஒரு நாள் கிரிக்கெட், டி20 மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் உச்சம் தொட்ட இலங்கை அணி தற்போது தொடர் தோல்வியால் துவண்டு வருகிறது. அண்மையில் அந்த அணி வீரர்கள் ஆசிய கோப்பை பட்டத்தை வென்று இழந்த பெருமையை மீட்டனர்.தற்போது இலங்கை அணிக்கு மீண்டும் ஒரு பெரிய சரிவு ஏற்பட்டிருக்கிறது.

- Advertisement -

இலங்கை கிரிக்கெட் வாரிய நிர்வாகிகளுக்கு இடையே கோஷ்டி மோதல் ஏற்பட்டுள்ளது. இதனால் ஒரு அதிகார பிரிவினர் மீது மற்றொரு அதிகார பிரிவினர் குற்றச்சாட்டி வருகின்றனர். இதற்கு ஒரு படி மேல் போய் இலங்கை கிரிக்கெட் அணி, கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக அந்நாட்டு நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர் நளீன் பந்தாரா குற்றம் சட்டி உள்ளார்.

கடந்த ஜூலை மாதம் இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு பாகிஸ்தான் அணி இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடியது. முதல் போட்டி பாகிஸ்தான் வென்ற நிலையில் , இரண்டாவது டெஸ்டில் இலங்கை அணி 246 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது . இந்தத் தொடரில் தான் இலங்கை வீரர்கள் மேட்ச் பிக்சிங் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது .இதனை அடுத்து இலங்கை கிரிக்கெட் வாரியம், ஐசிசி இந்த விவகாரத்தில் தலையிட்டு விசாரணை நடத்த வேண்டும் என்ற அழைப்பு விடுத்துள்ளது. இது குறித்து அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஐசிசி யின் முழு உறுப்பினரான இலங்கை கிரிக்கெட் வரையும் ஆட்டத்தில் நம்பகத்தன்மையை நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் ஏற்படுத்தும் பொறுப்பில் இருக்கிறது . இதற்காக ஐசிசி நிர்வாகிகள் வந்து இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தினால் மட்டுமே அது சரியாக இருக்கும். இந்த நடவடிக்கையின் மூலம் இலங்க கிரிக்கெட் வாரியத்திற்கு ஏற்பட்டுள்ள கலங்கம் துடைக்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளது.

இலங்கையில் பொருளாதார பிரச்சனை தீவிரமாக வெடித்த நிலையில் தான் பாகிஸ்தான் அணி இலங்கையில் விளையாடியது. பாகிஸ்தான் வீரர்கள் ஏற்கனவே கிரிக்கெட் சூதாட்டப் புகாரில் சிக்கி பலமுறை அந்நாட்டு வீரர்கள் தண்டனை பெற்று இருக்கிறார்கள்.இதனால் இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பந்தாரா கூறிய குற்றச்சாட்டு பெரிய பரப்பரப்பை ஏற்படுத்தி உள்ளது.

- Advertisement -