நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் அணி தோல்வியை தழுவியதை அடுத்து தொடரை மூன்றுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் முழுமையாக இழந்தது. இதனை ரசிகர் ஒருவர் கிண்டல் செய்ததை அடுத்து பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் அடிக்க பாய்ந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
பாகிஸ்தானுக்கு கிரிக்கெட்டில் கடந்த சில காலம் போதாத காலமாக அமைந்திருக்கிறது. பாகிஸ்தான் அணி செல்லும் இடமெல்லாம் தோற்று வருகிறது. சொந்த மண்ணில் நடைபெற்ற சாம்பியன் டிராபி தொடரில் கூட பாகிஸ்தான அணி முதல் ரவுண்டில் வெளியேறியது.
இந்த நிலையில் நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட பாகிஸ்தான் அணி 5 டி20 மற்றும் 3 ஒரு நாள் போட்டி கொண்ட தொடரில் விளையாடுகிறது. இதில் டி20 போட்டிகள் ஒரே ஒரு ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற மற்ற நான்கு டி20 போட்டிகளிலும் நியூசிலாந்து அணியும் வென்றது.
இதேபோன்று ஒரு நாள் தொடரையும் பாகிஸ்தான் அணி மூன்றுக்கு 0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றியது. மூன்றாவது ஒருநாள் போட்டியில் கூட பாகிஸ்தான் அணிக்கு 42 ஓவரில் 265 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இதில் பாபர் அசாம் 58 பந்துகளில் அரைசதம் அடித்த நிலையில் பாகிஸ்தான அணி 40 ஓவர் முடிவில் 221 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
இதனை அத்து வீரர்கள் தங்களது ட்ரெஸ்ஸிங் ரூமுக்கு சென்ற போது மைதானத்தில் இருந்த ரசிகர்கள் சிலர் பாகிஸ்தான் வீரர்களை கிண்டல் செய்திருக்கிறார்கள். இதனால் கடுப்பான பாகிஸ்தான் வீரர் குஸ்தில் ஷா, திடீரென்று பார்வையாளர்களை நோக்கி ஓடி அவரை அடிக்கப் பாய்ந்தார். அப்போது அங்கு இருந்த பாதுகாவலர்கள் உடனே குஸ்தில் சாவை தடுத்து நிறுத்தி அழைத்து சென்றனர்.
ஆனால் அதையும் மீறி அவர் அடிக்க பாய்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து தற்போது விளக்கம் அளித்துள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மைதானத்தில் இருந்த ஆப்கானிஸ்தான் நாட்டை சேர்ந்த இரண்டு பேர் பாகிஸ்தான் வீரர்களை கிண்டல் கேலி செய்ததாகவும் இப்படி செய்யாதீர்கள் என குஸ்தில் ஷா சொல்லியும், அவர்கள் தொடர்ந்து செய்ததால் ஆத்திரமடைந்து இவ்வாறு அவர் நடந்து கொண்டிருப்பதாகவும் இது குறித்து விசாரணை நடைபெறுவதாகவும் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: சிஎஸ்கே தந்த 3 சர்ப்ரைஸ்.. டெல்லி அணிக்கு நடந்த பெரிய பின்னடைவு.. சேப்பாக்கத்தில் மீண்டும் முயற்சி வருமா?
ஏற்கனவே டி20 உலக கோப்பையில் பாகிஸ்தான் தோற்றபோது இதேபோல் ஹரிஷ் ரவுப்பை ரசிகர்கள் சிலர் கிண்டல் செய்ய அவர் அடிக்க பாய்ந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் பி எஸ் எல் தொடர் வரும் ஏப்ரல் 11ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில், பாகிஸ்தான் வீரர்கள் அதில் பங்கேற்க உள்ளனர் .