சிஎஸ்கே தந்த 3 சர்ப்ரைஸ்.. டெல்லி அணிக்கு நடந்த பெரிய பின்னடைவு.. சேப்பாக்கத்தில் மீண்டும் முயற்சி வருமா?

0
190
Conway

இன்று சென்னை சேப்பாக்கத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே அணி மூன்று முக்கிய ஆச்சரியமான விஷயங்களை சிஎஸ்கே ரசிகர்களுக்கு கொடுத்திருக்கிறது. மேலும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு ஒரு முக்கிய பின்னடைவு உருவாகி இருக்கிறது.

நடப்பு ஐபிஎல் தொடரில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி இதுவரை விளையாடியிருக்கும் இரண்டு போட்டிகளில் இரண்டையும் வென்று இருக்கிறது. அதே சமயத்தில் சிஎஸ்கே அணி விளையாடி இருக்கும் மூன்று போட்டிகளில் இரண்டு போட்டிகளை தொடர்ந்து தோற்று இருக்கிறது. எனவே வெற்றி பெற வேண்டிய நெருக்கடி சிஎஸ்கே அணிக்கு மிகவும் அதிகமாக இருக்கிறது.

- Advertisement -

டெல்லி அணிக்கு ஏற்பட்டிருக்கும் பின்னடைவு

இன்றைய போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் அக்சர் படேல் முதலில் பேட்டிங்கை தேர்ந்தெடுத்தார். ஆனால் டெல்லி அணியில் அனுபவமிக்க தொடக்க ஆட்டக்காரர் பாப் டு பிளேசிஸ் விளையாடவில்லை. இது அவர்களுக்கு பெரிய பின்னடைவாக அமைந்திருக்கிறது. அதே சமயத்தில் துவக்க ஆட்டக்காரராக கடந்த போட்டியில் மிடில் வரிசையில் களம் இறங்கிய கேஎல்.ராகுல் விளையாடுகிறார்.

இது எல்லாவற்றையும் விட மகேந்திர சிங் தோனி இந்த போட்டியுடன் ஓய்வு முடிவை அறிவிப்பார் என்று எதிர்பார்த்த நிலையில் அப்படி எதுவும் வரவில்லை. ஆனால் அவருடைய தாய் தந்தையர் போட்டியைக் காண முதல்முறையாக வந்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இன்னொரு முக்கிய விஷயமாக கேப்டன் ருதுராஜ் இன்றைய போட்டியில் கேப்டனாகவே விளையாடுகிறார். அவருக்கு ஏற்பட்டிருந்த காயம் எந்தவித பாதிப்பையும் உருவாக்கவில்லை.

- Advertisement -

சிஎஸ்கே அணியின் முக்கிய மாற்றங்கள்

சிஎஸ்கே ரசிகர்கள் மகிழ்ச்சி அடையும் வகையில் சிஎஸ்கே அணி நிர்வாகம் இன்றைய போட்டிக்கு ராகுல் திரிபாதி இடத்துக்கு கான்வே கொண்டு வந்திருக்கிறது. முதல் போட்டியில் இருந்து சிஎஸ்கே ரசிகர்கள் அவரை பிளேயிங் லெவனில் கொண்டுவர வேண்டும் என கேட்டு வந்தார்கள். இந்த நிலையில் இவருக்காக ஓவர்டனை நீக்கி இருக்கிறார்கள்.

இதையும் படிங்க : ஹர்திக் பாண்டியாவின் இந்த மோசமான செயலை.. ஆரம்பித்து வைத்ததே தோனிதான் – முரளி கார்த்திக் விமர்சனம்

மேலும் சிஎஸ்கே ரசிகர்கள் இரண்டாவது வேகப்பந்துவீச்சாளராக அன்சூல் காம்போஜை கேட்டு வந்தார்கள். இந்த நிலையில் சிஎஸ்கே அணி நிர்வாகம் ஒரு டிவிஸ்ட் வைத்து அவரைக் கொண்டு வராமல் முகேஷ் சவுத்ரியை கொண்டு வந்திருக்கிறது. இவர் உள்ளே வருவதற்காக ராகுல் திரிபாதியை நீக்கி இருக்கிறார்கள். மேலும் பேட்டிங் யூனிட்டில் விஜய் சங்கர் தொடர்கிறார். தற்போது இரண்டு மாற்றங்கள் சிஎஸ்கே ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்திருக்கிறது.

- Advertisement -