PAK vs NZ.. 346 ரன்.. 43.4 ஓவர்கள்.. பாகிஸ்தானை அதிரவிட்ட இந்திய வம்சாவளி வீரர்.. நியூசி மாஸ் ஓபனிங்!

0
16347
Williamson

கிரிக்கெட் உலகம் மிகவும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை திருவிழா இன்று பயிற்சி போட்டிகளுடன் அமர்க்களமாக ஆரம்பித்திருக்கிறது!

இன்று மூன்று பயிற்சி போட்டிகளில் ஒரு பயிற்சி போட்டியில் பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகள் ஹைதராபாத் நகரின் ராஜீவ் காந்தி மைதானத்தில் மோதிக்கொண்ட போட்டி நடைபெற்றது.

- Advertisement -

இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் முதலில் பேட்டிங் செய்வது என தீர்மானித்தார். அந்த அணியின் துவக்க ஆட்டக்காரர்கள் அப்துல்லா சபிக் 14, இமாம் உல் ஹக் 1 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்கள்.

இதற்கு அடுத்து ஜோடி சேர்ந்த கேப்டன் பாபர் அசாம் மற்றும் முகமது ரிஸ்வான் இருவரும் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். பாபர் அசாம் 84 பந்துகளில் 80 ரன்கள் எடுத்து வெளியேறினார். மிகச் சிறப்பாக விளையாடிய முஹம்மது ரிஸ்வான் 94 பந்துகளில் 103 ரன்கள் எடுத்து மற்றவர்கள் விளையாட வெளியேறினார்.

இதற்கு அடுத்து களத்திற்கு வந்த சவுத் ஷகீல் அதிரடியாக விளையாடி 53 பந்துகளில் 75 ரன்கள் குவித்தார். ஆகா சல்மான் 23 பந்தில் 33 ரன்கள் எடுத்தார். 50 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் அணி ஐந்து விக்கெட் இழப்புக்கு 345 ரன்கள் குவித்தது.

- Advertisement -

இதற்கு அடுத்து பெரிய இலக்கை நோக்கி களம் இறங்கிய நியூசிலாந்து அணிக்கு டெவோன் கான்வோ தான் சந்தித்த முதல் பந்திலேயே கோல்டன் டக் அடித்தார். ஆனால் மற்றும் ஒரு துவக்க ஆட்டக்காரராக இந்த முறை அனுப்பப்பட்ட இந்திய வம்சாவளியை சேர்ந்த ரச்சின் ரவீந்தரா பேட்டில் கலக்கினார்.

ரச்சின் ரவீந்தரா மற்றும் காயத்தின் காரணமாக நீண்ட நாட்களுக்குப் பிறகு பேட்டிங் செய்ய வந்த கேன் வில்லியம்சன் இருவரும் அனாயசமாக பாகிஸ்தான் பந்துவீச்சை சிதறடித்தார்கள். கேன் வில்லியம்சன் 54 ரன்கள் எடுத்து அடுத்தவர்கள் விளையாட வெளியேறினார்.

இன்னொரு முனையில் மிகச் சிறப்பாக விளையாடிய ரச்சின் ரவீந்தரா அதிரடியாக 72 பந்துகளில் 97 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். அடுத்தடுத்து டாம் லாதம் 18, கிளன் பிலிப்ஸ் 3 ரன்களில் ஆட்டம் இழந்தார்கள். டேரில் மிட்சல் 59 ரன்கள் எடுத்து மற்றவர்கள் விளையாட வெளியேறினார்.

இதற்கு அடுத்து ஜோடி சேர்ந்த ஷாப்மேன் மற்றும் ஜிம்மி நீசம் இருவரும் அதிரடியாக விளையாடினார்கள். ஜிம்மி நீசம் 33 ரன்களில் ஆட்டம் இழந்தார். ஷாப்மேன் 41 பந்துகளில் 65 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் சிக்ஸர் அடித்து நியூசிலாந்து அணியை 43.4 ஓவர்களில் வெல்ல வைத்தார். சரியான நேரத்தில் வழக்கம் போல நியூசிலாந்து எழுந்திருக்கிறது!