PAK vs NED.. பாபர் அசாம் சொன்னது ஒன்னு நடந்தது வேற.. பாகிஸ்தானுக்கு பயம் காட்டும் நெதர்லாந்து.. உலக கோப்பையில் சுவாரசியம்!

0
680
Babar

நேற்று துவங்கிய ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் இன்று ஹைதராபாத் ராஜீவ் காந்தி மைதானத்தில் நெதர்லாந்து அணியை எதிர்த்து பாகிஸ்தான அணி விளையாடி வருகிறது.

இந்தப் போட்டிக்கான டாசில் வெற்றி பெற்ற நெதர்லாந்து அணி முதலில் பந்து வீச்சை தேர்ந்தெடுத்தது. பாகிஸ்தான் தரப்பில் மிடில் ஆர்டரில் ஆகா சல்மானுக்கு இடம் மறுக்கப்பட்டு, சவுத் ஷகீலுக்கு இடம் வழங்கப்பட்டு இருக்கிறது.

- Advertisement -

ஹைதராபாத் ராஜீவ் காந்தி மைதானத்தை பொருத்தவரை ஆரம்பத்தில் துவக்க ஆட்டக்காரர்கள் விளையாடுவதற்கு கொஞ்சம் சிரமமாக பந்து நின்று வரும். பிறகு படிப்படியாக மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் விளையாடுவதற்கு வசதியாக இருக்கும்.

இந்தப் போட்டிக்கான டாஸ் தோற்ற பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் ஆஸம் பேசும்பொழுது “நாங்கள் எங்களுடைய பேட்டிங்கில் சிறந்ததை செய்ய முயற்சி செய்வோம். நாங்கள் எங்களுடைய துவக்க ஆட்டக்காரர்கள் இமாம் மற்றும் பகார் இருவரையும் நம்புகிறோம். ஷாகின் நல்லபடியாக இருக்கிறார். ஹசன் அலி திரும்ப வருகிறார். நாங்கள் 290 முதல் 300 ரன்கள் எடுக்க விருப்பப்படுகிறோம்!” என்று கூறியிருந்தார்!

இந்த நிலையில் நெதர்லாந்து அணி வலதுகை சுழற் பந்துவீச்சாளர் ஆரியன் தத்தை வைத்து முதலில் பந்துவீச்சை ஆரம்பித்தது. பாகிஸ்தான் அணியின் துவக்க ஆட்டக்காரர்களுக்கு ரன் வருவது சிரமமாக இருந்தது.

- Advertisement -

இதற்கு அடுத்து வேகப்பந்துவீச்சாளர் வான் பிக் பந்துவீச்சில் அவரிடமே கேட்ச் கொடுத்து பகார் ஜமான் 12 ரன்களில் வெளியேறினார். மற்றும் ஒரு துவக்க ஆட்டக்காரர் இமாம் உல் ஹக் வான் மீகரன் பந்துவீச்சில் ஆரியன் தத் இடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

இதற்கு நடுவில் பாகிஸ்தான அணியின் கேப்டன் பாபர் அசாம் அதிர்ச்சி அளிக்கும் விதமாக மிக எளிமையான முறையில் ஆக்கர்மேன் பந்துவீச்சில் ஜுல்பிகர் இடம் கொடுத்து ஐந்து ரண்களில் வெளியேறினார்.

தற்பொழுது முகமது ரிஸ்வான் மற்றும் சவுத் ஷகீல் களத்தில் இருக்க, முக்கிய மூன்று விக்கெட்டுகளை இழந்து பாகிஸ்தான் அணி தடுமாறி விளையாடிக் கொண்டிருக்கிறது. மேலும் கேப்டன் பாபர் அசாம் நம்பிக்கை வைத்த துவக்க ஆட்டக்காரர்கள் பவர்பிளே முடிவதற்குள் வெளியேறி விட்டார்கள்!