பாகிஸ்தானை சிதைத்து, டெஸ்டின் முதல் நாளில் இங்கிலாந்து அணி படைத்த நினைத்துப்பார்க்க முடியாத சாதனைகள்!

0
5785

பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாளில் இங்கிலாந்து அணி பல்வேறு சாதனைகளை படைத்திருக்கிறது அவற்றை நாம் இங்கு காண்போம்.

சுமார் 17 வருடங்கள் கழித்து பாகிஸ்தான் வந்து டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வரும் இங்கிலாந்து அணி, முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாளில் நான்கு விக்கெட் இழப்பிற்கு 506 ரன்கள் அடித்தது. இதில் நான்கு இங்கிலாந்து வீரர்கள் சதம் அடித்திருக்கின்றனர்.

- Advertisement -

இதன் மூலம் பல்வேறு சாதனைகள் முறியடிக்கப்பட்டு புதிய சாதனைகளாக மாற்றப்பட்டு இருக்கிறது. இங்கிலாந்து அணி படைத்த சாதனைகளின் விவரங்களை நாம் இங்கே காண்போம்.

டெஸ்ட் போட்டியின் முதல் நாளில் அடிக்கப்பட்ட அதிகபட்ச ரன்கள்!

இங்கிலாந்து அணி முதல் டெஸ்டின் முதல் நாள் முடிவில் 506 ரன்கள் அடித்தது. இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் போட்டியின் முதல் நாளில் அதிகபட்ச ஸ்கொரை அடித்த அணி என்ற சாதனையை படைத்தது.

இதற்கு முன்னர், 1910ல் ஆஸ்திரேலிய அணி தென்னாபிரிக்கவுக்கு எதிராக 494 ரன்கள் அடித்திருந்தது. இதுவே அதிகபட்சமாக இருந்தது. அதற்கு அடுத்த அதிகபட்சமாக, 2012ல் ஆஸ்திரேலியா அணி மீண்டும் தென்னாபிரிக்காவுக்கு 482 ரன்கள் அடித்தது உள்ளது.

- Advertisement -
டெஸ்ட் போட்டியின் முதல் நாளில் 4 சதங்கள்!

டெஸ்ட் போட்டியின் முதல் நாளில் நான்கு வீரர்கள் சதம் அடித்தது வரலாற்றில் இதுவே முதல் முறையாகும். அதில் மூன்று வீரர்கள் ஸ்ட்ரைக் ரேட் 100க்கும் அதிகம் என்பதும் குறிப்பிடத்தக்கது. கிரிக்கெட் வரலாற்றில் இதற்கு முன்னர் இப்படி நிகழ்ந்தது இல்லை.

அதிவேக ஓபனிங் பார்ட்னர்ஷிப்!

ஜாக் கிராலி மற்றும் பென் டக்கட் இருவரும் முதல் விக்கெட்டிற்கு 233 ரன்களை 35.4 ஓவர்களில் சேர்த்தனர். இதற்கு முன் முதல் விக்கெட்டிற்கு 200+ ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த துவக்க ஜோடிக்கு மத்தியில் இதுதான் அதிவேகமாகும். இந்த ஜோடி 6.53 ரன்ரேட்டில் விளையாடியது.

இதற்கு அடுத்த இடத்தில் 2015ம் ஆண்டு ஆஸ்திரேலிய துவக்க ஜோடி ஜோ பர்ன்ஸ்-வார்னர் 239 ரன்கள் பார்ட்னர்ஷிப்பை 6.29 ரன்ரேட்டில் அமைத்தனர்.

ஒரே ஓவரில் 6 பவுண்டரிகள்!

பாகிஸ்தானின் அறிமுக வீரர் சவுத் ஷகீல் வீசிய ஓவரில் இங்கிலாந்து வீரர் ஹாரி புரூக் 4 பவுண்டரிகள் அடித்தார். டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஒரே ஓவரில் 6 பவுண்டரிகள் அடிப்பது இது 5வது முறையாகும்.