PAK vs AFG.. பாகிஸ்தான் ODI- ல் NO-1 இடத்தை பிடித்தது.. முஜிப் அதிரடிசாதனை வீண்.. ஆப்கான் வொய்ட் வாஷ்!

0
4485
Mujeeb

ஆப்கானிஸ்தான் அணி பாகிஸ்தான் அணிக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இலங்கையில் வைத்து மோதி வருகிறது. ஆசியக்கோப்பைக்கு முன்பாக இரு அணிகளுக்கும் இது மிகச் சிறந்த பயிற்சியாக அமைந்திருக்கிறது!

இந்த தொடரில் முதலில் நடைபெற்ற இரண்டு போட்டிகளிலும் பாகிஸ்தான் அணி வென்று தொடரைக் கைப்பற்றியது. முதல் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணி 59 ரன்களில் சுருண்டது. இரண்டாவது போட்டியில் 300 ரன்கள் குவித்து பதிலடி தந்தாலும், கடைசிக் கட்டத்தில் வெற்றியைப் பறி கொடுத்தது.

- Advertisement -

இந்த நிலையில் இன்று தொடரின் மூன்றாவது மற்றும் கடைசி போட்டி பிரேமதாசா மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டிக்கான டாசில் வென்ற பாகிஸ்தான் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. ஆடுகளம் பந்து வீச்சுக்கு சாதகமாக இருந்தது.

பாகிஸ்தான் அணியின் துவக்க ஆட்டக்காரர்கள் பகார் ஜமான் 27 மற்றும் இமாம் உல் ஹக் 13 ரன்களில் வெளியேறினார்கள். அடுத்து வந்த கேப்டன் பாபர் ஆஸம் மற்றும் முகமது ரிஸ்வான் இருவரும் பொறுப்புடன் விளையாடி அரை சதம் எடுத்தார்கள். இருவரும் முறையே 60 மற்றும் 67 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்கள்.

இதற்கடுத்து ஆஹா சல்மான் 38 ரன்கள் முகமது நவாஸ் 30 ரன்கள் எடுக்க, 50 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் அணி எட்டு விக்கெட் இழப்புக்கு 268 ரன்கள் சேர்த்தது. குல்பதின் நைப் மற்றும் பரீத் அஹமத் இருவரும் தலா இரண்டு விக்கெட்டுகள் வீழ்த்தினார்கள்.

- Advertisement -

கடந்த போட்டியில் துவக்கட்டக்காரர்களாக வந்து மிகச் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்திய ஆப்கானிஸ்தான் துவக்க ஆட்டக்காரர்கள் ரஹமனுல்லா குர்பாஸ் 5, இப்ராஹிம் ஜட்ரன் 0 இருவரும் சீக்கிரத்தில் வெளியேறினார்கள். இந்த முறை துவக்க ஆட்டக்காரராக மாற்றி வந்த ரியாஸ் ஹசன் 34 ரன்கள் எடுத்தார்.

இதற்குப் பிறகு ஆப்கானிஸ்தான் அணியின் முக்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேறி ஏமாற்றம் அளித்தார்கள். எனவே மீண்டும் ஒரு பரிதாபமான தோல்வி ஆப்கானிஸ்தான் அணிக்கு உறுதியாகி இருந்தது.

இந்த நிலையில் ஒன்பதாவது விக்கட்டுக்கு பேட்டிங் செய்ய வந்த முஜிப்பூர் ரகமான் அட்டகாசமான பேட்டிங்கை வெளிப்படுத்தினார். மிகச் சிறப்பாக விளையாடிய அவர் 26 பந்துகளில் அரை சதம் அடித்து, அதிவேகமாக ஒருநாள் கிரிக்கெட்டில் அரைத்ததம் அடித்த ஆப்கானிஸ்தான் வீரர் என்ற சாதனையை படைத்தார். இறுதிக்கட்டத்தில் ஹிட் விக்கெட் மூலமாக 37 பந்தில் 5 பவுண்டரி மற்றும் 5 சிக்ஸர்கள் உடன் 64 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். முடிவில் 209 ரன்களுக்கு ஆப்கானிஸ்தான் அணி ஆட்டம் இழந்தது.

பாகிஸ்தான அணி மூன்று போட்டிகள் கொண்ட தொடரின் மூன்றாவது போட்டியிலும் வெற்றி பெற்று தொடரை முழுவதுமாகக் கைப்பற்றியது. இந்த வெற்றியின் மூலம் ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் பாகிஸ்தான் அணி முதல் இடத்தை பிடித்து அசத்தியிருக்கிறது. இந்த போட்டிக்கு முன்பாக ஆஸ்திரேலிய மற்றும் பாகிஸ்தான் அணிகள் 118 புள்ளிகள் உடன் இருந்தன. இந்தியா மூன்றாவது இடத்தில் 113 புள்ளிகளுடன் இருப்பது குறிப்பிடத்தக்கது!