இவர் தான் அடுத்த விராட் கோலி, பாபர் அசாம்.. முன்னாள் பாக். வீரர் பாராட்டு

0
348

சர்வதேச கிரிக்கெட்டில் ஒவ்வொரு காலகட்டத்தில் எப்போதுமே சில வீரர்கள் சிறந்து விளங்குவார்கள். கவாஸ்கர், சச்சின், விராட் கோலி தொடங்கி பாபர் அசாம் வரை அது நீடித்து வருகிறது. இந்த நிலையில் அடுத்த விராட் கோலி , பாபர் அசாம் யார் என்று கேள்வி தற்போது எழுந்துள்ளது. அதற்கு பாகிஸ்தான் அணியில் முன்னாள் கேப்டன் ரசித் லதிப் அளித்துள்ள பேட்டியை தற்போது காணலாம்.

- Advertisement -

இங்கிலாந்தை சேர்ந்த ஹாரி புரூக் கடந்த சில இன்னிங்ஸ்லாக பிரமாதமாக விளையாடி வருகிறார். அவரை எப்படி ஆட்டமிழக்க வைப்பது என்று தெரியாமல் பந்துவீச்சாளர்கள் திணறி வருகிறார்கள். ஐபிஎல் மினி ஏலத்தில் கூட விலை உயர்ந்த வீரர்கள் ஒருவராக ஹாரி புருக் விளங்கினார். தற்போது உள்ள சர்வதேச கிரிக்கெட்டை எடுத்துக் கொண்டால் ஹாரி புருக் மிகச்சிறந்த பேட்ஸ்மேனாக விளங்கி வருகிறார்.

இதே போல் அவர் விளையாடி வந்தால் அடுத்த விராட் கோலி ,பாபர் அசாமாக விளங்க ஹாரி புருக்கிற்கு வாய்ப்பு இருக்கிறது. ஹாரி புருக் ஒரு அரிதான வீரராக என் கண்களுக்கு தெரிகிறார். சில வீரர்கள் மட்டும்தான் அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலும் தன்னுடைய திறமையை நிரூபிப்பார்கள். ஹாரி புருக் செல்லும் இடமெல்லாம் வெற்றியாளராக விளங்குகிறார்.
விராட் கோலி போன்ற வீரரிடம் பேட்டிங்கில் சிம்பிள் டெக்னிக் இருக்கும். அது ஹாரி புருக்கிடம் இருக்கிறது என்று ரஷித் லதிப் பாராட்டினார்.

பாகிஸ்தானுக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் அறிந்து தொடர்ந்து இரண்டு சகங்களை விளாசியது மூலம் ஹாரி புருக் பிரபலமாகி வருகிறார்.தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியில் ஹாரி புருக் 75 பந்துகளில் 80 ரன்கள் விளாசினார். அதிரடியாக விளையாடி எதிர் அணிக்கு நெருக்கடி ஏற்படுத்த கூடிய வீரராக ஹாரி புருக் விளங்கி வருகிறார். ஐபி எல் மினி ஏலத்தில் விளங்குவார்கள்.  13.25 கோடி ரூபாய்க்கு ஹாரி புருக்கை சன்ரைசர்ஸ் அணி ஏலத்தில் எடுத்து உள்ளது.

- Advertisement -