தென் ஆப்பிரிக்காவில் புகழ்பெற்ற எஸ்ஏ டி20 கிரிக்கெட் லீத் தொடர் நடைபெற்று வரும் நிலையில் இதன் மூன்றாவது போட்டி பார்ல் ராயல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணிகளுக்கு இடையே இன்று மாலை நடைபெற்றது.
இதில் சிறப்பாக விளையாடிய பார்ல் ராயல்ஸ் அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் அணியை வீழ்த்தியது.
எஸ்ஏ டி 20 கிரிக்கெட் லீக் தொடர்
தென்னாப்பிரிக்காவில் தற்போது ஐபிஎல் கிரிக்கெட் லீக் தொடர் போன்று எஸ்ஏ டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதன் முதல் இரண்டு போட்டிகள் ஏற்கனவே நடைபெற்று முடிந்த நிலையில் மூன்றாவது போட்டி இன்று மாலை தொடங்கியது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 175 ரன்கள் குவித்தது. சன்ரைசர்ஸ் அணியில் தொடக்கம் மூன்று விக்கெட்டுகள் விரைவிலேயே இழந்தாலும் அதற்கு பிறகு களம் இறங்கிய கேப்டன் மார்கரம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
49 பந்துகளை எதிர்கொண்ட நிலையில் 7 பவுண்டரி மற்றும் 2 சிக்சர் என 82 ரன்கள் குவித்தார். இதனால் சன்ரைசர்ஸ் அணி 20 ஓவர்களில் 175 ரன்கள் குவித்தது. இதற்குப் பின்னர் வெற்றி இலக்கை நோக்கி பார்ல் ராயல்ஸ் அணி களம் இறங்கியது. இந்த அணியின் தொடக்க வீரர்கள் லுஹாண்ட்ரி பிரிட்டோரியஸ் மற்றும் ஜோ ரூட் ஆகியோர் ஆடுகளத்தின் தன்மையை உணர்ந்து நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள்.
தினேஷ் கார்த்திக் அணி வெற்றி
அதே நேரத்தில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்த ஜோடியில் பிரிட்டோரியஸ் 57 பந்துகளை எதிர்கொண்டு 10 பவுண்டரி மற்றும் 6 சிக்சர் என 97 ரன்கள் குவித்த நிலையில் 3 ரன்னில் அவரது சதம் மிஸ் ஆனது. மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜோ ரூட் 44 பந்துகளை எதிர்கொண்டு 62 ரன்கள் குவித்து அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார். இறுதியில் ஜோ ரூட் மற்றும் கேப்டன் மில்லர் ஆகியோர் விளையாடி அணியை வெற்றி பெற வைத்தனர்.
இதையும் படிங்க:ஐபிஎல் தொடங்க முக்கிய காரணமே.. அந்த சம்பவம்தான்.. தென் ஆப்பிரிக்கா எனக்கு எப்பவுமே ஸ்பெஷல் – தினேஷ் கார்த்திக் நெகிழ்ச்சி
இதனால் ராயல்ஸ் அணி 18.4 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் குவித்து வெற்றி பெற்றது. ராயல்ஸ் அணியில் இடம் பெற்று இருந்த தினேஷ் கார்த்திக் பேட்டிங் களமிறங்குவார் என எதிர்பார்த்த வேளையில் விக்கெட் இழக்காததால் அவர் கடைசி வரை களமிறங்கவில்லை. இதனால் 8 பந்துகளை மீதம் வைத்து ராயல்ஸ் அணி வெற்றி பெற்றது. ஏற்கனவே முதல் போட்டியில் தோல்வி அடைந்திருந்த சன்ரைசர்ஸ் அணி இரண்டாவது போட்டியிலும் தோல்வி அடைந்த புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.