உலக கிரிக்கெட்

5 பந்துகள் மீதம்.. சூப்பர் கிங்ஸ் வெற்றியை பறித்த டேவிட் மில்லர்.. பேர்ஸ்டோ அதிரடி வீண்.. 6 விக்கெட்டில் ராயல்ஸ் வெற்றி

எஸ்ஏ டி20 கிரிக்கெட் லீக் தொடரில் நேற்று நடைபெற்ற 15 வது போட்டியில் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் மற்றும் பார்ல் ராயல்ஸ் அணிகள் மோதி விளையாடின.

- Advertisement -

இதில் சிறப்பாக விளையாடிய டேவிட் மில்லர் தலைமையிலான பார்ல் ராயல்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் சிறப்பான வெற்றியை பதிவு செய்தது.

எஸ்ஏ டி20 கிரிக்கெட் லீக்

போலண்ட் பார்க்கில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற ராயல்ஸ் அணி முதலில் பந்து வீச தீர்மானித்தது. இதன்படி பேட்டிங் களம் இறங்கிய ஜோபர்க் அணியில் தொடக்க ஜோடி நிலைத்து நின்று விளையாடவில்லை. கான்வே 7 ரன்னில் வெளியேற, மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் கேப்டன் டூ பிளஸ்சிஸ் 19 பந்துகளில் 18 ரன்கள் எடுத்த நிலையில் வெளியேறினார். அதற்குப் பிறகு டுப்லாய் ஆறு ரன்னில் வெளியேற, 13.3 ஓவர்களில் 72 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய சூப்பர் கிங்ஸ் அணிக்கு பெரிரா மற்றும் பேர்ஸ்டோ ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.

ஏதுவான பந்துகளை மட்டுமே பௌண்டரிக்கு விரட்டிய பேர்ஸ்டோ 40 பந்துகளில் 2 பவுண்டரி மற்றும் 3 சிக்ஸ் என 60 ரன்கள் குவித்தார். மறுபுறம் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய பெரிரா 19 பந்துகளை மட்டுமே எதிர்கொண்டு 1 பவுண்டரி மற்றும் 2 சிக்ஸ் என 32 ரன்கள் குவித்தார். இதனால் சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 146 ரன்கள் குவித்தது. ராயல்ஸ் அணி பந்துவீச்சு தரப்பில் போர்டின் அதிகபட்சமாக 2 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.

- Advertisement -

டேவிட் மில்லர் அதிரடி ஆட்டம்

அதற்குப் பிறகு வெற்றி இலக்கை நோக்கி ராயல்ஸ் அணி களம் இறங்கியது. இந்த தொடரில் இதுவரை சிறப்பாக விளையாட வந்த ஜோ ரூட் எதிர்பாராத விதமாக 6 ரன்னில் வெளியேறினார். மறுபுறம் மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் பிரிட்டோரியஸ் 14 பந்துகளை மட்டுமே எதிர்கொண்டு அதிரடியாக விளையாடி 27 ரன்கள் குவித்தார். மேலும் ஹெர்மன் 14 ரன்கள், வேன் பூரென் நிதானமாக விளையாடி 44 ரன்கள் எடுத்தார்.

இதையும் படிங்க:பல கேப்டன் இருக்கலாம்.. ஆனா ரோஹித் பையாகிட்ட கத்துகிட்ட தரமான விஷயம் இதுதான் – ரிஷப் பண்ட் பேட்டி

அதற்குப் பின்னர் களமிறங்கிய டேவிட் மில்லர் 32 பந்துகளில் 3 பவுண்டரி மற்றும் 1 சிக்ஸ் என 40 ரன்கள் குவிக்க 19.1 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 150 ரன்கள் எடுத்து சிறப்பான வெற்றியை பதிவு செய்தது. இதுவரை 5 போட்டிகளில் விளையாடிய ராயல்ஸ் அணி நான்கு போட்டிகளில் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியது. சூப்பர் கிங்ஸ் அணி 5 போட்டிகளில் விளையாடி 2 வெற்றி 2 தோல்வி ஒரு முடிவில்லாத போட்டி என புள்ளி பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது

- Advertisement -
Published by