ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலம் கடந்த சில வாரங்களுக்கு முன்பாக துபாயில் நடைபெற்று முடிந்த நிலையில் டெல்லி அணியில் இருந்த ரிஷப் பண்டை லக்னோ சூப்பர் ஜெயின்ஸ் அணி 27 கோடி ரூபாய்க்கு வாங்கி இன்று அவரை அதிகாரப்பூர்வ கேப்டனாக அறிவித்தது.
இந்த சூழ்நிலையில் ரிஷப் பண்ட் கேப்டன்ஷிப் குறித்து சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.
லக்னோ அணியின் கேப்டன்
ஐபிஎல் தொடரில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்காக மட்டுமே இதுவரை விளையாடி வந்த ரிஷப் பண்ட் முதல் முறையாக அந்த அணியில் இருந்து விலகி மெகா ஏலத்திற்கு வந்தார். ஏற்கனவே லக்னோ அணியில் கே எல் ராகுலுடன் சிறிய மனக்கசப்பில் இருந்த லக்னோ நிர்வாகம் கேஎல் ராகுலை விடுவித்து ஒரு ஐகான் வீரரை எடுக்கும் முயற்சியில் இறங்கியது. சரியாக ரிஷப் பண்ட் ஏலத்திற்கு வர 27 கோடி ரூபாய்க்கு அவரை அள்ளியது.
இந்த சூழ்நிலையில் லக்னோ அணியின் புதிய கேப்டன் யார் என்று சில கருத்துக்கள் சமீபத்தில் பரவி வந்த நிலையில் இன்று அதிகாரப்பூர்வமாக லக்னோ அணி ரிஷப் பண்டை கேப்டனாக அறிவித்தது. இந்த சூழ்நிலையில் கேப்டனாக அறிவிக்கப்பட்ட பிறகு கேப்டன்ஷிப் குறித்து ரிஷப் பண்ட் சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார். மேலும் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவிடமிருந்து ஒரு வீரரை எப்படி நடத்த வேண்டும் என்று கற்றுக் கொண்டதாக சில கருத்துக்களை தெரிவித்து இருக்கிறார்.
ரோஹித் பையாவிடமிருந்து இதை கற்றுக் கொள்ளலாம்
இதுகுறித்து அவர் கூறும் பொழுது “நான் நிறைய கேப்டன்கள் மற்றும் சீனியர் வீரர்களிடம் இருந்து நிறைய கற்றுக் கொண்டுள்ளேன். ஏனென்றால் உங்கள் கேப்டனிடம் இருந்து மட்டுமே கற்றுக் கொள்ள வேண்டும் என்கிற அவசியமில்லை. மூத்த வீரர்களிடமிருந்து நிறைய கற்றுக் கொள்ளலாம். ஆனால் ரோஹித் பையாவிடமிருந்து ஒரு வீரரை எப்படி வழி நடத்துவது என்பது குறித்து கற்றுக் கொள்ளலாம். நான் ஒரு அணிக்கு கேப்டனாக இருக்கும்போது இதை புரிந்து கொள்கிறேன். ஒரு வீரருக்கு நீங்கள் நம்பிக்கை கொடுத்தீர்கள் என்றால் அவர் அணிக்கு செய்ய முடியாத விஷயங்களை செய்வார் என்று என்னால் நம்ப முடியும்.
இதையும் படிங்க:150 கிமீ வேக பந்துகளை ஆடாதவர்கள்.. எனக்கு அறிவுரை கூறுவது எரிச்சல் ஊட்டுகிறது – ஸ்ரேயாஸ் ஐயர் காட்டமான கருத்து
இதுவே எங்கள் சித்தாந்தம் நாங்கள் வீரர்களுக்கு போதிய நம்பிக்கையை கொடுப்போம். அவர்களுக்கு எந்த வகையான பாத்திரத்தை கொடுக்க விரும்புகிறோம் என்பதில் தெளிவாக இருப்போம். ஒரு அணிக்கு இதுதான் முக்கியம் என்று நினைக்கிறேன். ஆனால் நான் எப்போதும் வலியுறுத்துவது களத்தில் கடைசி பந்து வரை போராட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என்பதுதான். அது மட்டுமே எனது உறுதியான நிலைப்பாடு” என்று கூறி இருக்கிறார்.