வில்லியம்சன் ஸ்டாய்னிஸ் போராட்டம் வீண்.. தினேஷ் கார்த்திக் அதிரடி.. 6 விக்கெட்டில் ராயல்ஸ் அணி வெற்றி.. எஸ்ஏ டி20

0
2635

தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வரும் எஸ்ஏ டி20 கிரிக்கெட் லீக் தொடரின் 23வது ஆட்டத்தில் டேவிட் மில்லர் தலைமையிலான பார்ல் ராயல்ஸ் அணி மற்றும் மகாராஜ் தலைமையிலான டர்பன் சூப்பர் ஜெயின்ஸ் அணிகள் மோதி விளையாடினர்.

இதில் டேவிட் வில்லர் தலைமையிலான அணி ஒரு பந்து மீ mதம் வைத்து 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது.

- Advertisement -

எஸ்ஏ டி 20 கிரிக்கெட் லீக்

போலண்ட் பார்க்கில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற டர்பன் அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. இதன்படி பேட்டிங்கை டிகாக் மற்றும் பிரண்டன் கிங் ஆகியோர் தொடங்கினார்கள். இதில் இருவரும் ஜீரோ மற்றும் 3 ரன்னில் வெளியேற, அதற்குப் பின்னர் வில்லியம்சன் மற்றும் பார்சன்ஸ் ஜோடி டர்பன் அணியின் ஸ்கோரை உயர்த்த விளையாடியது. இதில் 16 ரன்னில் பார்சன் வெளியேற அதற்குப் பிறகு ஸ்டாய்னிஷ் வில்லியம்ஸ் உடன் ஜோடி சேர்ந்தார்.

ஸ்டாய்னிஸ் அதிரடியாக விளையாடி 40 பந்துகளை எதிர்கொண்டு ஐந்து பௌண்டரி மற்றும் இரண்டு சிக்ஸ் என 55 ரன்கள் குவித்தார் மறுமுனையில் வில்லியம்சன் 36 பந்துகளில் 5 பவுண்டரி மற்றும் ஒரு சிக்ஸ் என 45 ரன்கள் குவித்தார். இதனால் டர்பன் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 143 ரன்கள் குவித்தது. இதற்குப் பிறகு வெற்றி இலக்கை நோக்கி ராயல்ஸ் அணி களம் இறங்கியது.

- Advertisement -

பார்ல் ராயல்ஸ் அணி சிறப்பான வெற்றி

அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஜோ ரூட் முதல் பந்தில் வெளியேறினாலும், அதற்குப் பிறகு ஜோடி சேர்ந்த ஹெர்மன் மற்றும் பிரிட்டோரியஸ் ஜோடி இரண்டாவது விக்கெட்டுக்கு 76 பந்துகளில் 91 ரன்கள் குவித்தது. இதில் 51 பந்துகளில் 59 ரன்கள் குவித்த ஹர்மன் ஸ்டாய்னிஸ் பந்துவீச்சில் எதிர்பாராத விதமாக ஆட்டம் இழந்தார். சிறப்பாக விளையாடிக் கொண்டிருந்த பிரிட்டோரியஸ் 29 பந்துகளில் 43 ரன்னில் வெளியேற, மிடில் வரிசையில் களமிறங்கிய தினேஷ் கார்த்திக் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

இதையும் படிங்க:இந்திய பேட்ஸ்மேன்ஸ் ரன் அடிக்கட்டும்.. எங்க மெக்கலம் தந்த பிளான் இதுதான் – மார்க் வுட் பேட்டி

15 பந்துகளை மட்டுமே எதிர்கொண்ட நிலையில் இரண்டு சிக்ஸர்கள் அடித்து 21 ரன்கள் குவித்து 18.4வது ஓவரில் எதிர்பாராத விதமாக ஆட்டம் இழந்தார். 19ஆவது ஓவரில் நான்கு விக்கெட் இழப்புக்கு 138 ரன்கள் குவித்திருந்த ராயல்ஸ் அணி வெற்றிக்கு 6 பந்துகளில் 6 ரன்கள் தேவைப்பட்டது. இதில் கடைசி ஓவரின் ஐந்தாவது பந்தில் கலீம் சிக்ஸர் அடிக்க, ராயல்ஸ் அணி ஒரு பந்தை மீதம் வைத்து 6 விக்கட்டுகள் வித்தியாசத்தில் 147 ரன்கள் குவித்து வெற்றி பெற்றது.

- Advertisement -