இங்கிலாந்து அணியின் வேகப்பந்துவீச்சாளர் மார்க் வுட் தங்கள் அணியின் தலைமை பிரண்டன் மெக்கலம் என்ன மாதிரியான பந்துவீச்சு அணுகு முறையை அமைத்திருக்கிறார்? என்பது குறித்து பேசி இருக்கிறார்.
நாளை இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையே 5 போட்டிகள் கொண்ட தொடரின் மூன்றாவது போட்டி குஜராத் ராஜ்கோட் மைதானத்தில் இரவு 7 மணிக்கு துவங்குகிறது. இந்த தொடரில் நடைபெற்று இருக்கும் இரண்டு போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்று இருப்பதால், நாளைய போட்டியில் வெற்றி பெற்றால் தொடரை கைப்பற்றி விடும் என்பது குறிப்பிடத்தக்கது.
இங்கிலாந்து தரப்பில் ரன் கசிவு
முதல் டி20 போட்டியில் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் கேஸ் அட்கின்சன் ரன்களை வாரி வழங்கினார். இதைத் தொடர்ந்து இரண்டாவது போட்டியில் அவர் நீக்கப்பட்டு அவருடைய இடத்திற்கு இன்னொரு வேகப்பந்துவீச்சாளர் பிரைடன் கார்ஸ் கொண்டுவரப்பட்டார். அவருடைய பந்து வீச்சு சிறந்த முறையில் இருந்தது.
அதே சமயத்தில் இங்கிலாந்தின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சர் பந்துவீச்சு முதல் டி20 போட்டியில் சிறப்பாக இருந்த பொழுதும், வெற்றி பெறுவதற்கு நெருக்கத்தில் இருந்த இரண்டாவது டி20 போட்டியில் சிறப்பாக அமையவில்லை. அவர் நான்கு ஓவரில் 60 ரன்கள் கொடுத்திருந்தார். அவருடைய ஓவரில் மூன்று சித்தர்களை திலக் வர்மா அடித்திருந்தால்.
மார்க் வுட் தந்த விளக்கம்
இதுகுறித்து இங்கிலாந்து அணியின் மார்க் வுட் பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசும்பொழுது ” நாங்கள் பொதுவாகவே அதிக விக்கெட்டுகளை கைப்பற்றவே நினைக்கிறோம். எங்களுடைய தலைமை பயிற்சியாளர் பிரண்டன் மெக்கலம் ரன்கள் செல்வதைப் பற்றி கவலைப்பட கூடியவர் என்று நான் நினைக்கவில்லை. அவர் ஆட்டத்தில் எப்படி தாக்கம் செலுத்தலாம்? என்பது குறித்து மட்டும்தான் சிந்திப்பார்”
இதையும் படிங்க : புரூக் இல்ல.. எழுதி வச்சுக்கோங்க.. இந்த இங்கிலாந்து பையன் சூப்பர் ஸ்டாரா வருவார் – அஸ்வின் கணிப்பு
“கடந்த ஆட்டத்தில் நாங்கள் குழுவாக இணைந்து சிறப்பாகவே பந்து வீசினோம். 165 ரன்களை பாதுகாப்பதற்கு, நாங்கள் விக்கெட் வீழ்த்தி ஆக வேண்டிய ஆப்ஷன்களை எப்பொழுதும் பார்க்கிறோம். இதன் காரணமாக எங்களில் சிலர் சில நேரத்தில் ரன்களுக்கு சென்று இருக்கலாம். ஆனால் இது விக்கெட்டுகளை கைப்பற்றி போட்டியை வெல்வதற்கான முயற்சியில் நடந்த விஷயம்தான். மற்றபடி இது ஒரு பிரச்சனை கிடையாது” என்று கூறியிருக்கிறார்.






