கோலிகிட்ட ஓவரா பண்ணிட்டிங்க.. வாசிம் அக்ரம் வந்தாலும் காப்பாற்ற முடியாது.. சம்பவம் இருக்கு – ஸ்ரீசாந்த் பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை!

0
1798
Virat

ஆசியக் கோப்பையில் அனைவரும் எதிர்பார்த்து இருந்த இந்தியா பாகிஸ்தான் போட்டி மழையில் முடிவில்லாமல் கைவிடப்பட்டது எல்லோருக்கும் வருத்தமான ஒன்று.

அதே சமயத்தில் மிகவும் கவலை அளிக்கக்கூடிய விஷயமாக இடதுகை வேகப்பந்து வீச்சாளருக்கு இந்திய பேட்ஸ்மேன்கள் தங்கள் விக்கெட்டை மிக எளிதாக கொடுத்தது இருந்தது.

- Advertisement -

கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் பாகிஸ்தான் இளம் இடதுகை வேகப்பந்துவீச்சாளர் ஷாகின் ஷா அப்ரிடி பந்துவீச்சில் தங்கள் விக்கெட்டை இழந்தார்கள்.

இருவரில் ரோகித் சர்மாவுக்கு விழுந்த பந்து விளையாடுவதற்கு மிகவும் கடினமான பந்து. இதற்கு முன்னால் இரண்டு பந்துகளை வெளியில் வீசி இந்த பந்தை உள்ளே கொண்டு வந்தார் ஷாகின் ஷா அப்ரிடி. இதன் காரணமாக பந்து எப்படி வருகிறது என்று தெரியாமல் ரோகித் சர்மா ஆட்டம் இழந்தார்.

அதே சமயத்தில் விராட் கோலிக்கு வந்த பந்து மிகவும் சாதாரணமான ஒரு பந்து. அவர் அந்த பந்தை பெரிய அளவில் எதிர்பார்த்த காரணத்தினால், அவருடைய கவனம் தவறி தேவையில்லாமல் பேட்டை நீட்டி இன்சைட் எட்ஜ் எடுத்து போல்ட்டு ஆனார். அவருக்கே இது மிகவும் வருத்தமாக அமைந்திருக்கும்.

- Advertisement -

தற்பொழுது இதுகுறித்து பேசி உள்ள இந்திய அணியின் முன்னாள் வீரர் ஸ்ரீசாந்த் “இது இந்தியாவுக்கு துரதிஷ்டவசமானது ஆனால் விராட் கோலி விக்கட்டை பெறுவது பாகிஸ்தானுக்கு அதிர்ஷ்டமானது. ஏனெனில் பந்து இன்சைட் எட்ஜ் ஆனது. நான் அதை விக்கெட் ஆகவே நினைக்கவில்லை. விராட் கோலியை எனக்கு தனிப்பட்ட முறையில் தெரியும்.

அவரது விக்கெட்டை கைப்பற்றிய பிறகு பாகிஸ்தானின் கொண்டாட்டத்தை பார்த்த அவருடைய மனதில் என்ன நடந்திருக்கும் என்று எனக்கு தெரியும். எனவே நான் அடுத்த இந்தியா பாகிஸ்தான் போட்டிக்காக மிகவும் ஆவலுடன் காத்திருக்கிறேன்.

ரோகித் சர்மா எப்பொழுதும் இடது கை வேகப்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக தடுமாறினார் என்று நான் கூற மாட்டேன். நீங்கள் நல்ல நிலையில் இருக்கும் பொழுது எல்லாமே நல்லதாக அமையும். அவர் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் சிறப்பான ஷாட்கள் ஆரம்பத்தில் விளையாடினார்.

அந்த போட்டியில் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா இருவரும் அழகாக தெரிந்தார்கள். விராட் கோலியின் கவர் டிரைவ் பார்த்த பிறகு அவர் சதம் அடிப்பார் என்று நினைத்தேன். அடுத்த போட்டிக்கு காத்திருங்கள். அவர்கள் அணியில் எந்த இடது கை வேகப்பந்துவீச்சாளர் வந்தாலும் அவர்களை நாம் ஆதிக்கம் செலுத்துவோம்!” என்று கூறியிருக்கிறார்!