அத்துமீறிய ஆடம் ஜாம்பா ; முறியடித்த மூன்றாவது நடுவர்; வீடியோ உள்ளே!

0
136
BBL

இந்திய கிரிக்கெட் வாரியத்தால் நடத்தப்பட்டு வரும் டி20 தொடர் ஐபிஎல் போல ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் பிபிஎல் எனும் டி20 தொடரை நடத்தி வருகிறது!

இந்தத் தொடரில் இன்று ஆரோன் பின்ச் தலைமை தாங்கும் மெல்போன் ரெனிகேட்ஸ் அணியும் ஆடம் ஜாம்பா தலைமை தாங்கும் மெல்போன் ஸ்டார்ஸ் அணியும் மோதின!

இந்தப் போட்டிக்கான டாசில் வென்ற மெல்போன் ஸ்டார்ஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட் செய்த மெல்போன் ரெனிகேட்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் ஏழு விக்கெட்டுகள் இழப்பிற்கு 141 ரன்கள் சேர்த்தது.

இந்த ஆட்டத்தில் முதல் பகுதியில் கடைசி இருபதாவது ஓவரை வீசிய ஆடம் ஜாம்பா, தன்னுடைய பந்துவீச்சு முனையில் இருந்த எதிரணியின் வீரர் டாம் ரோஜரை கிரீசை விட்டு முன்கூட்டியே வெளியே செல்கிறார் என்று ரன் அவுட் செய்தார்.

இவர் செய்த இந்த ரன் அவுட் மூன்றாவது நடுவரின் முடிவுக்கு சென்றது. ஆனால் மூன்றாவது நடுவர் இதற்கு அவுட் கொடுத்த மறுத்துவிட்டார். காரணம் என்னவென்றால் ஆடம் ஜாம்பா பந்துவீச்சை முடிக்கும் புள்ளியின் போது பேட்ஸ்மேன் சரியாகத்தான் இருந்தார், ஆனால் ஆடம் ஜாம்பா பந்தை ரிலீஸ் செய்யாமல், கையை இன்னும் கீழே கொண்டு வந்து பிறகு ரன் அவுட் செய்தார். அதாவது அவர் ரன் அவுட் செய்வதற்காக பந்தை ரிலீஸ் செய்யவே இல்லை. இந்தக் காரணத்தால் மூன்றாவது நடுவர் அவுட் கொடுக்கவில்லை. இதற்கான வீடியோ லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது!

தற்போது இது இணையதளத்தில் மிகப்பெரிய விவாதத்தை உருவாக்கி இருக்கிறது. ஏற்கனவே இப்படியான ரன் அவுட் சர்ச்சையில் இந்திய அணியின் அஸ்வின் மற்றும் தீப்தி சர்மா இருவரும் இருந்தார்கள். ஆனால் அவர்கள் சரியான முறையில் ரன் அவுட் செய்திருந்தார்கள். அப்படி இருந்துமே இந்த ரன் அவுட் முறை அவசியமற்றது இது ஆட்ட உத்வேகத்திற்கு எதிரானது என்று இங்கிலாந்து கிரிக்கெட்டர்களிடம் பலத்த எதிர்ப்பு கிளம்பி இருந்தது குறிப்பிடத்தக்கது. தற்பொழுது இப்படியான கருத்தைக் கொண்டவர்களுக்கு தீனி போடுவதாய் ஆடம் ஜாம்பா செயல் அமைந்திருக்கிறது!

இந்தப் போட்டியில் ஆடம் ஜாம்பா யாரை தவறாக ரன் அவுட் செய்ய முயன்றாரோ அந்த வீரரான டாம் ரோஜர் ஆட்டத்தின் இரண்டாவது பகுதியில் நான்கு ஓவர்கள் பந்து வீசி 16 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து ஐந்து விக்கெட்டுகளை கைப்பற்றி ஆடம் ஜாம்பாவின் அணிக்கு தோல்வியை பரிசளித்தார்.