அடுத்த ஆண்டு இவர் சென்னை அணியின் சிறந்த வீரராய் வருவார் – கேப்டன் தோனி நம்பிக்கை

0
245
MS Dhoni CSK

நேற்று ஐ.பி.எல் பதினைந்தாவது சீசனின் 68-வது போட்டி, ப்ளே-ஆப்ஸ் வாய்ப்பை ஏற்கனவே இழந்துவிட்ட சென்னை அணிக்கும், புள்ளி பட்டியலில் மூன்றாம் இடத்திலிருந்து இரண்டாம் முன்னேற முயற்சிக்கும் ராஜஸ்தான் அணிக்கும் இடையே, மும்பையின் ப்ரோபோர்ன் மைதானத்தில் நடந்து முடிந்திருக்கிறது.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் மகேந்திர சிங் தோனி, ப்ளே-ஆப்ஸ் வாய்ப்பை இழந்திருப்பதால், இலக்கைத் துரத்தும் நெருக்கடி இல்லாமல் பேட்ஸ்மேன்கள் விளையாட வேண்டுமென்று கூறி, முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதன்படி சென்னை அணியின் பேட்டிங்கை துவங்க வந்த ருதுராஜ்-கான்வோ ஜோடியில் ருதுராஜை முதல் ஓவரின் கடைசிப் பந்தில் வெளியேற்றினார். முதல் மூன்று ஓவர்களில் 15 ரன்கள் மட்டுமே வந்திருக்க, அடுத்த மூன்று ஓவரில் 60 ரன்களை, மொயீன்அலி-கான்வோ ஜோடி குவித்தது. ஆனால் அதற்கடுத்த 14 ஓவர்களில் சென்னை அடித்தது வெறும் 75 ரன்கள்தான். நிர்ணயிக்கப்பட்ட இருபது ஓவரின் முடிவில் சென்னை அணி 150 ரன்களை மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக மொயீன் அலி 57 பந்தில் 93 ரன்கள் குவித்தார். இவர் தனது அரைசதத்தை 19 பந்துகளில் அடித்திருந்தார். இது சென்னை அணிக்காக வேகமாக அடிக்கப்பட்ட இரண்டாவது அரைசதம் ஆகும். இதற்கு முன்பு சுரேஷ் ரெய்னா பஞ்சாப் அணிக்கு எதிராக 16 பந்துகளில் அடித்திருந்தார்.

- Advertisement -

சென்னை அணி 200 ரன்களை தாண்டும் என்று இருந்த நிலையில் 150 ரன்களில் மடக்கிய மகிழ்ச்சியில் களம் புகுந்த ராஜஸ்தான் அணியின் முதல் மூன்று விக்கெட்டுகளை சென்னை அணி சீக்கிரத்தில் கைப்பற்றியது. ஆனால் இந்திய இளம் வீரரும், ராஜஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரருமான ஜெய்ஷ்வால் நிலைத்து நின்று அரைசதமடித்து ஆட்டமிழந்தார். அவருக்கு அடுத்து வந்த ஹெட்மயரும் உடனே ஆட்டமிழந்தார். இதனால் ஆட்டத்தில் திடீர் பரபரப்பு உருவானது. ஆனால் இதற்கு நடுவில் களமிறங்கி இருந்த தமிழக வீரர் அஷ்வின் மிகச்சிறப்பான தாக்குதல் ஆட்டத்தை வெளிப்படுத்தி, 23 ரன்களில் 40 ரன்களை அடித்து, இறுதிவரை ஆட்டமிழக்காமல் நின்று அணியை வெற்றிப்பெற வைத்தார். பந்துவீச்சில் நான்கு ஓவர்கள் வீசி 28 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட்டையும் கைப்பற்றி இருந்தார். இதனால் இவரே ஆட்ட நாயகனாகவும் தேர்ந்தெடுக்கப் பட்டார்.

போட்டி முடிந்து ஆட்டம் குறித்துப் பேசிய சென்னை அணியின் கேப்டன் தோனி, “நாங்கள் பத்து முதல் பதினைந்து ரன்கள் குறைவாக அடித்துவிட்டோம். விக்கெட்டுகள் நடுவில் சீக்கிரத்தில் விழுந்ததால், தாக்கி ஆட முடியவில்லை. எங்கள் அணியின் மலிங்கா சிறப்பாக பந்து வீசுகிறார். அவர் வீசும் பந்தை பேட்ஸ்மேன்கள் கணிப்பதற்கு கடினமாய் இருக்கிறது. அவர் ஆண்டு சென்னை அணிக்கு சிறந்த வீரராய் வருவார்” என்று இலங்கை அன்டர் 19 அணியின் பந்துவீச்சாளரான சென்னை அணி வீரர் மதிஷா பதிரணா பற்றிப் புகழ்ந்து கூறினார்.