விராட் பாப் மேக்ஸி இந்த பேட்டிங் யூனிட்ட விட பவுலிங் யூனிட்தான் ரொம்ப நல்லா இருக்கு! – ஹர்ஷல் படேல் சொல்லும் புதுக்கதை!

0
1087
Harshal

நேற்று பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதிக்கொண்ட பரபரப்பான ஆட்டம் ஒன்றில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணி இறுதி ஓவரில் 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது!

இந்தப் போட்டியில் முதலில் விளையாடிய பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு பாப் 62 மேக்ஸ்வெல் 77 ரன்கள் எடுக்க, அந்த அணி குறைந்தபட்சம் 210 ரன்கள் எடுக்கும் என்ற நிலை இருந்தது. ஆனால் இவர்களுக்குப் பிறகு வந்த பேட்ஸ்மேன்கள் சொதப்ப 189 ரன்கள் மட்டுமே வந்தது.

- Advertisement -

பெங்களூர் ஆடுகளத்தில் இந்த ரண்களை துரத்துவது எளிதான ஒன்றுதான் என்பதால் வெற்றிக்கு அதிகபட்ச வாய்ப்பு ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு இருந்தது. வேகப்பந்துவீச்சாளர் முகமது சிராஜ் மிகச் சிறப்பாக பந்து வீசினார். இன்னொரு முனையில் மற்றும் ஒரு வேகப்பந்துவீச்சாளர் ஹர்சல் பட்டேல் நான்கு ஓவர்கள் பந்துவீசி 32 ரன்கள் மட்டும் தந்து மூன்று முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தி வெற்றிக்கு உதவி செய்தார்.

வெற்றிக்குப் பிறகு பேசிய ஹர்சல் படேல் ” நாங்கள் இரண்டு முறை 175 ரன்களுக்குள் அணியை காத்திருப்பதால் எங்களது பேட்டிங் யூனிட்டை விட பவுலிங் யூனிட் பலமாக இருக்கிறது என்று நான் உணர்கிறேன். இன்றும் எதிர் தரப்பினர் பார்-ஸ்கோரில் எங்களை விட 5, 6 ரன்கள் முன்னிலையில்தான் இருந்தார்கள். ஆனால் எங்களால் அது டிஃபென்ட் செய்ய முடிந்த ஸ்கோர்தான்!” என்று கூறியிருக்கிறார்!

தொடர்ந்து பேசிய அவர்
“விக்கெட் மெதுவாகவும் பந்து கொஞ்சம் இளகியும் இருந்ததால் மெதுவான பந்துகளை வீசுவது கடினம் என்ற எண்ணம் இருந்தது. அஸ்வின் லெக் சைடை நோக்கி அதிகம் அடிக்க முற்பட்டதால், நான் பந்துகளை ஆப் சைடு வெளியே வீச முயற்சி செய்தேன். இந்த லைனில் இருந்து என்னை ஒருவர் பவுண்டரிக்கு அடித்தால் அது பற்றி எனக்கு கவலை இல்லை!” என்று கூறி இருக்கிறார்!

- Advertisement -

மேலும் தொடர்ந்து பேசிய அவர்
“கடந்த இரண்டு ஆட்டங்களில் நாங்கள் கிட்டத்தட்ட மூன்று நான்கு டைரக்ட் ஹிட் மூலம் ரன் அவுட் செய்திருக்கிறோம். சுயாஷ் பிரபுதேசாய் பேட்டிங்கில் பங்களிக்க முடியாத காரணத்தால் அவர் பீல்டிங்கில் ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்து இருந்தார். அவர் ஹெட்மயரை செய்த ரன் அவுட் எங்களுக்கு இந்த ஆட்டத்தை மாற்றி அமைத்திருக்கலாம்!” என்று கூறியிருக்கிறார்!