17 வருடங்கள் நடக்காததை நடத்திக்காட்டிய ரோகித்-ஜெய்ஸ்வால் ஜோடி! – டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய ரெக்கார்ட்!

0
2008

வெஸ்ட் இண்டீஸ் தீவுகள் மண்ணில் கிட்டத்தட்ட 17 வருடங்களுக்குப் பிறகு இந்திய அணியின் துவக்க ஜோடி 100 ரன்கள் பார்ட்னர்ஷிப்பை நிகழ்த்தி காட்டியுள்ளது. ரோகித் சர்மா மற்றும் ஜெய்ஸ்வால் இந்த வரலாற்றை சாத்தியமாக்கினர்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு பிறகு மேற்கிந்திய தீவுகளுக்கு சென்று டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடி வரும் இந்திய அணி, மொத்தம் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. முதல் டெஸ்ட் போட்டி டாமினிக்காவில் உள்ள மைதானத்தில் நடைபெறுகிறது.

- Advertisement -

முதலில் பேட்டிங் செய்து முதல் இன்னிங்சில் வெஸ்ட் இண்டீஸ் அணியை வெறும் 150 ரன்களில் சுருடியது இந்திய அணி. ரவிச்சந்திரன் அஸ்வின் டெஸ்ட் வரலாற்றில் 33வது முறையாக 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். ஜடேஜா மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதைத் தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணிக்கு அறிமுக வீரர் ஜெய்ஷ்வால் மற்றும் கேப்டன் ரோஹித் சர்மா இருவரும் களமிறங்கினர். இந்த ஜோடி முதல் நாள் முடிவில் 80 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து விக்கெட் இழப்பின்றி முடித்தது.

இரண்டாம் நாள் ஆட்டத்தை துவங்கிய இந்திய அணிக்கு அறிமுகவீரர் ஜெய்ஸ்வால் அரைசதம் அடித்தார் அவரைத் தொடர்ந்து கேப்டன் ரோகித் சர்மா தன்னுடைய அரைசதத்தை நிறைவு செய்தார். கேள்வி கேட்டு இருக்கு இந்த ஜோடி நூறு ரண்களுக்கும் மேல் பார்ட்னர்ஷிப் அமைத்து தற்போது விளையாடி வருகிறது.

- Advertisement -

துவக்க ஜோடி முதல் விக்கெட் இருக்கு 100 பிளஸ் ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்ததன் மூலம், கிட்டத்தட்ட 17 வருடங்கள் கழித்து வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல் விக்கெட்டிற்கு 100 பிளஸ் ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த வரலாற்றை ரோகித்-ஜெய்ஷ்வால் ஜோடி படைத்திருக்கிறது.

ஜெய்ஸ்வால் முதல்முறையாக டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமாகிறார். இவருடன் சேர்ந்து கேப்டன் ரோகித் சர்மா பாட்டாஷிப் அமைத்து வரலாறு படைத்திருப்பது பாராட்டுகளை பெற்று வருகிறது.

தொடர்ந்து பேட்டிங் செய்து வரும் இந்திய அணியின் துவக்க ஜோடி 200 ரன்கள் பார்ட்னர்ஷிப்பை நெருங்கிவருகிறது. அறிமுகவீரர் ஜெய்ஸ்வால் சதாம் நெருங்கி வருகிறார் ரோகித் சர்மா 85 ரன்கள் அடித்துள்ளார். இந்திய அணியின் முன்னிலை கிட்டத்தட்ட 50 ஆக இருக்கிறது.