48 வருட ODI உலகக் கோப்பை வரலாற்றில் இங்கிலாந்து மட்டுமே செய்த மோசமான சாதனை.. விடாமல் தொடரும் சோகம்!

0
520
Buttler

நேற்று ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் டெல்லியில் இங்கிலாந்து அணி ஆப்கானிஸ்தான் அணி இடம் அதிர்ச்சி தோல்வி அடைந்தது. நடப்பு உலக சாம்பியனான இங்கிலாந்து அணி நடப்பு ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரை தன் பங்கிற்கு தோல்வியின் மூலம் சுவாரசியப்படுத்தி இருக்கிறது!

நேற்று நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்று பேட்டிங் செய்ய சாதகமான ஆடுகளத்தை கொண்ட மேலும் சிறிய மைதானமான டெல்லியில் இங்கிலாந்து முதலில் பேட்டிங் செய்ய முடிவு எடுக்காதது பெரிய ஆச்சரியத்தை எல்லோருக்கும் கொடுத்தது.

- Advertisement -

வெற்றியை மட்டுமே நோக்கமாகக் கொண்ட ஜோஸ் பட்லர் அதற்கான முடிவையே எடுத்தார். ஆனால் ஆப்கானிஸ்தான் அணிக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுத்தும் கூட, நடப்பு சாம்பியன் இங்கிலாந்து அணியால் ஆப்கானிஸ்தான் அணியை வெல்ல முடியாமல் போனது பெரிய அதிர்ச்சியாக இருக்கிறது.

இங்கிலாந்து அணி ஆட்டத்தின் இரண்டாவது பகுதியில் பனிப்பொழிவு இருக்கும் என்று எதிர்பார்த்தார்கள். பனிப்பொழிவு இல்லாதது அவர்களுக்கு ஒரு பெரிய பிரச்சனையாக இருந்தது என்று சொல்லிவிட முடியாது. அவர்களுடைய சுழற் பந்துவீச்சுக்கு எதிரான பேட்டிங் அணுகுமுறையே மிக மோசமாக இருந்தது. அவர்களுடைய தோல்விக்கு காரணம் வீரர்கள் சரியான முறையில் விளையாடாததுதான்.

மேலும் இந்த தோல்வியின் மூலம் இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் அந்தஸ்து பெற்ற 11 நாடுகளிடமும் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பையில் தோல்வி அடைந்திருக்கிறது. நேற்று ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராகப் பெற்ற தோல்வியின் மூலம் இப்படி ஒரு மோசமான சாதனைக்கு சொந்தக்காரர் ஆகியிருக்கிறது.

- Advertisement -

ஆஸ்திரேலியா வெஸ்ட் இண்டீஸ் இந்தியா ஆகிய அணிகளிடம் முன்கூட்டியே ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் தோற்று இருந்த இங்கிலாந்து, இதற்கு அடுத்து நியூசிலாந்து அணி இடமும், 92 ஆம் ஆண்டு பாகிஸ்தான் அணியிடமும், 96 ஆம் ஆண்டு இலங்கை அணி இடமும் தோல்வியடைந்து இருந்தது.

மேலும் இதே 96 ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்கா அணியிடமும் உலக கோப்பையில் தோல்வி அடைந்தது. இதற்கு அடுத்து 2011 ஆம் ஆண்டு அயர்லாந்து அணியிடம் தோல்வி அடைந்தது. அதே ஆண்டில் பங்களாதேஷ் அணியிடமும் தோல்வியடைந்தது. தற்பொழுது ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராகவும் தோல்வி அடைந்து டெஸ்ட் அந்தஸ்து பெற்ற எல்லா அணிகளுக்கு எதிராகவும் உலக கோப்பையில் தோல்வி அடைந்த ஒரே அணியாக இங்கிலாந்து தற்பொழுது இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது!