இந்த பவுலரை தோனியால் மட்டும்தான் அடிக்க முடியும்; மத்தவங்க அடிச்சா ஒன்னு ரெண்டு ரன்தான் போகும் – டாம் மூடி!

0
6186
Dhoni

நேற்று ஐபிஎல் பதினாறாவது சீசனில் ஹைதராபாத் ராஜீவ் காந்தி மைதானத்தில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் மோதிக்கொண்ட போட்டியில், ஆட்டம் கடைசி ஓவர் வரை பரபரப்பாக சென்றது. இறுதியில் 7 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி இரண்டாவது வெற்றியை பதிவு செய்தது!

இந்த போட்டியில் முதலில் விளையாடிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி மிகவும் தடுமாறி ஒன்பது விக்கெட்டுகள் இழப்புக்கு 144 ரன்கள் எடுத்தது. ஹைதராபாத் மைதானத்தில் இந்த இலக்கு என்பது சாதாரணமாக எட்டக் கூடியதுதான்.

- Advertisement -

இந்த நிலையில் இலக்கை நோக்கி விளையாடிய ஹைதராபாத் டெல்லியை விட மோசமாக விளையாடியது. இறுதியில் கிளாசன் மற்றும் வாஷிங்டன் சுந்தர் அதிரடியாக விளையாட கடைசி ஓவருக்கு 13 ரன்கள் தேவைப்பட்டது.

அந்தக் கடைசி ஓவரை வீசிய முகேஷ் குமார் களத்தில் வாஷிங்டன் சுந்தர் மற்றும் யான்சன் இருவரையும் வைத்துக்கொண்டு, மிகப் பிரமாதமாக வீசி வெறும் ஐந்து ரன்கள் மட்டுமே கொடுத்து 7 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அணிக்கு வெற்றியைக் கொண்டு வந்தார்.

முகேஷ் குமார் பந்து வீச்சு பற்றி முன்னாள் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் பயிற்சியாளர் டாம் மூடி பேசுகையில்
” உண்மையில் முகேஷ் குமார் இப்படியான அழுத்தத்தை விரும்பக் கூடியவர் போல இருக்கிறார். அவர் ஓடிவந்து ஆணி அடிப்பது போல யார்கர் பந்துகளை வீசுவதை பார்ப்பது இது முதல் முறை அல்ல. நாங்கள் ஏற்கனவே பார்த்தது போல கடைசியில் மிகவும் சிறப்பான லோ ஃபுல் டாஸ் பந்துகள் இருந்தது. நீங்கள் எம்.எஸ்.தோனியாக இருந்தால் மட்டுமே அந்தப் பந்துகளை அடிக்க முடியும். இல்லையென்றால் அந்த பந்துகளில் ஒன்று இரண்டு எனதான் ரன்கள் வரும்!” எனக் கூறியிருக்கிறார்!

- Advertisement -

மேலும் தொடர்ந்து பேசிய டாம் மூடி
” அது மிக மிக சிறப்பான கடைசி ஓவர். ரொம்ப எளிதான திட்டம், அது சிறப்பாகச் செயல்படுத்தப்பட்டது. டேவிட் வார்னர் ஒவ்வொரு பந்துக்கும் முகேஷ் குமார் காதில் ‘ என்ன மாதிரியான பந்தை வீசப் போகிறாய்? தொடர்ந்து யார்கர்தான் வீசப் போகிறாயா? அப்படி என்றால் அதற்குத் தகுந்த பீல்டிங்கை நான் வைத்துத் தருகிறேன்!’ என்று கேட்டு கேட்டு அவரை பேக் செய்து கொண்டுபோய் இருப்பார் என்று நினைக்கிறேன்!” என்று கூறியிருக்கிறார்!