“இந்தியாவை வெல்ல.. ஆஸ்திரேலியா இத செஞ்சா மட்டும்தான் முடியும்!” – நாசர் ஹுசைன் அதிரடி அட்வைஸ்!

0
2236
ICT

இந்தியாவில் நடைபெற்று வரும் 13ஆவது ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் வருகின்ற ஞாயிறு 19ஆம் தேதி குஜராத் அகமதாபாத் மைதானத்தில் மோதிக் கொள்கின்றன.

இந்தியா அணி இந்த தொடர் முழுக்க ஒரு தோல்வி கூட அடையாமல் கம்பீரமாக இறுதிப் போட்டிக்கு பத்து வெற்றிகளை தொடர்ச்சியாக பெற்று வந்திருக்கிறது.

- Advertisement -

அதே சமயத்தில் ஆஸ்திரேலியா அணி முதல் இரண்டு ஆட்டங்களில் தோல்வி அடைந்து, கடைசி எட்டு ஆட்டங்களில் தொடர்ச்சியாக வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு வந்திருக்கிறது.

இதுவரையிலான இந்த உலகக் கோப்பையில் இரு அணிகளின் செயல்பாட்டை வைத்து பார்க்கும் பொழுது, இந்திய அணியின் செயல்பாடு ஆஸ்திரேலியா அணியின் செயல்பாட்டை விட கொஞ்சம் சிறப்பானதாக இருக்கிறது.

தற்போதுள்ள இந்திய அணியை வெல்ல வேண்டும் என்றால் ஒரு அணி எல்லா வகையிலும் மிகச் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தினால் மட்டுமே சாத்தியம் என்கின்ற நிலை இருக்கிறது.

- Advertisement -

இந்த நிலையில் இந்தியாவை வீழ்த்துவது குறித்து ஆஸ்திரேலியா எப்படி இருக்க வேண்டும் என்று, இங்கிலாந்து வழியில் முன்னாள் கேப்டன் நாசர் ஹூசைன் கூறியிருக்கிறார்.

இதுகுறித்து அவர் பேசும் பொழுது “இந்த ஆஸ்திரேலியா கிரிக்கெட் வீரர்கள் நிறைய பெரிய போட்டிகளில் விளையாடி இருக்கிறார்கள். இவர்களில் சிலர் கம்மின்ஸ் தலைமையில் தற்பொழுது இந்திய அணிக்கு எதிராக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் வெற்றி பெற்றவர்கள்.

ஆனால் ஆஸ்திரேலியா கிரிக்கெட் மனநிலை என்பது அவர்கள் சிறப்பாக விளையாடினோம் இறுதிப் போட்டிக்கு வந்தோம் என்பது மட்டும் கிடையாது. அவர்கள் ஸ்டீவ் வாக் மற்றும் ரிக்கி பாண்டிங் போன்றவர்களது காலத்தைப் பார்த்தவர்கள்.

நாங்கள் இறுதி போட்டிக்கு வந்திருக்கிறோம் ஆறாவது முறையாக உலக கோப்பையை வெல்லப் போகிறோம் என்பதாகத்தான் அவர்களுடைய மனநிலை இருக்கும். அவர்கள் அப்படித்தான் களம் இறங்குவார்கள்.

இந்திய அணியை தோற்கடிப்பது கடினம். இந்திய அணியை வெல்ல வேண்டுமென்றால் ஸ்மித் போன்ற ஒருவர் பெரிய சதங்கள் அடிக்க வேண்டும்.

ஆஸ்திரேலியா அணிக்கு துவக்க ஆட்டக்காரர்கள் டேவிட் வார்னர் மற்றும் டிராவிட் அதிரடியாக விளையாடுவதற்கு போவார்கள். அவர்களிடம் மேற்கொண்டு மார்ஸ் மற்றும் மேக்ஸ்வெல் இருவரும் இருக்கிறார்கள்.

ஆனால் இவர்களையெல்லாம் இணைக்கும் பசையாக ஸ்மித் மட்டுமே இருப்பார். அவர் நின்று ஒரு பெரிய இன்னிங்ஸ் விளையாடினால் ஆஸ்திரேலியா அணி வெல்வதற்கு வசதியாக இருக்கும். அதே சமயத்தில் இந்திய அணியை வெல்ல ஆஸ்திரேலியா பேட்டிங் பந்துவீச்சு என இரண்டிலும் சமமாக இருந்தால் மட்டுமே முடியும்!” என்று கூறி இருக்கிறார்!