” முதல் 2 ஓவரில் 2 சிக்ஸர்கள் அடித்தால் மட்டுமே 3வது பவர்ப்பிளே ஓவருக்கு செல்ல முடியும் ” – வினோத விதிகளுடன் கூடிய டி10 லீக்

0
332

கரீபியன் பிரீமியர் லீக் மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் நிர்வாகம் இருவரும் இணைந்து புதிய 10 ஓவர்கள் கொண்ட டி 10 லீக் தொடரை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தத் தொடருக்குப் சிக்ஸ்டி என்கிற பெயரை சுட்டி உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த லீக் தொடருக்காக பிரத்தியேகமாக ஒரு சில விதிமுறைகளை இரு நிர்வாகம் கொண்டு வந்துள்ளது. இந்த சிக்ஸ்டி தொடரில் எந்த விதிமுறைகள் இருக்கப் போகின்றது என்பதை பார்ப்போம்.

- Advertisement -

சிக்ஸ்டி தொடரில் கடைப்பிடிக்க போகும் புதிய விதிமுறைகள் :

10 ஓவர்கள் கொண்ட ஆட்டம் இரு அணிகளுக்கும் நடைபெறும். 10 ஓவர்களில் 2 ஓவர்கள் பவர் பிளே ஓவர்கள். இந்த இரண்டு ஓவர்களில் அதாவது 12 பந்துகளில் 2 சிக்ஸர் அடிக்கும் பட்சத்தில் 3வது ஓவர் பவர் பிளே ஓவராக எடுத்துக்கொள்ளப்படும்.

- Advertisement -

ஒவ்வொரு அணிக்கும் மொத்தம் 6 விக்கெட்டுகள். 6 விக்கெட்டுகள் வீழ்ந்த பின்னர் அந்த அணியின் ஆட்டம் முடிவுக்கு வந்துவிடும். ஒரு ஓவர் வீசிய பின்னர் பௌலிங் என்டை மாற்றாமல் இந்தத் தொடரில் ஒரு பக்கத்தில் இருந்து 5 ஓவர்களும் மறுபக்கத்தில் இருந்து 5 அ
ஓவர்களும் வீசப்படும்.

நாற்பத்தி ஐந்து நிமிடத்திற்குள் 10 ஓவர்கள் ஒரு அணி வீச முடியாமல் போனால் கடைசி ஓவரில் ஃபீல்டிங் செய்து கொண்டிருக்கும் ஒரு நபர் மைதானத்தை விட்டு வெளியேற வேண்டும். ரசிகர்கள் மொபைல் செயலி மூலம் மிஸ்ட்ரி ஃப்ரீ ஹிட்டுக்கு வாக்களிக்க முடியும்.

- Advertisement -