ஆர்சிபி ரசிகர்களே சோகமான செய்தி…ஒரு பக்கம் பொளந்துகட்டும் மும்பை இந்தியன்ஸ்… இன்னொரு பக்கம் மழை! இன்று போட்டி நடக்குமா? – ரிப்போர்ட்!

0
412

பெங்களூரில் உள்ள சின்னசாமி மைதானத்தில் மழை நிற்காமல் பெய்து வருகிறது. மற்றொரு பக்கம் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றியை எளிதாக நெருங்கி வருகிறது. இது ஆர்சிபி அணிக்கு மிகப்பெரிய தலைவலியை கொடுத்துள்ளது.

மும்பை இந்தியன்ஸ் அணி தனது கடைசியில் லீக் போட்டியை ஹைதராபாத் அணிக்கு எதிராக விளையாடி வருகிறது. இப்போட்டியில் கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டிய நிலையில் இருக்கிறது.

- Advertisement -

அதேபோல் ஆர்சிபி அணி தனது கடைசி லீக் போட்டியை குஜராத் அணிக்கு எதிராக பெங்களூருவில் விளையாடுகிறது. ஏற்கனவே குஜராத் அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுவிட்டது. ஆர்சிபி அணி தகுதிபெற இப்போட்டியில் வெற்றி பெறுவது மிகவும் முக்கியமானதாகவும் இருந்து வருகிறது.

இப்படிப்பட்ட ஒரு இக்கட்டான சூழலில் ஆர்சிபி அணிக்கு மிகப்பெரும் தலைவலியை கொடுத்திருக்கிறது பெங்களூருவில் தற்போது பெய்து வரும் மழை. காலையிலிருந்து மழை தூரல்கள் விடாமல் பெய்து வருகிறது. குறிப்பாக மதியத்திற்கும் மேல் இன்னும் வேகமாக மழைப்பொழிவு இருந்து வருவதால் போட்டி நடக்குமா? இல்லையா? என்கிற சந்தேகங்கள் நிலவியது.

நடுவில் ஐந்தரை மணி வாக்கில் மழைப்பொழிவு சற்று நின்றது. இது ஆர்சிபி அணிக்கு நம்பிக்கையை கொடுத்தது. ஆனால் மீண்டும் 6:00 மணிக்கு மேல் மழை மீண்டும் பெய்யத் துவங்கிவிட்டதால் போட்டி நடக்குமா? இல்லையா? என்கிற சந்தேகம் மீண்டும் எழுந்துள்ளது.

- Advertisement -

ஆர்சிபி மற்றும் குஜராத் அணிகள் மோதும் போட்டி இரவு ஒன்பதரை மணிக்குள் துவங்கவேண்டும். அதற்கும் மேலும் மழை நிற்காமல் பெய்தால் ஆட்டம் முடிவில்லாததாக அறிவிக்கப்பட்டு இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளிகள் கொடுக்கப்படும். இப்படி ஒரு சூழல் ஏற்பட்டால் ஆர்சிபி அணி பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெற முடியாமல் வெளியேறும்.

ஏனெனில் ஆர்சிபி அணி 14 போட்டிகள் முடிவில் 15 புள்ளிகள் மட்டுமே அதிகபட்சமாக பெற்றிருக்கும். அதேநேரம் மும்பை இந்தியன்ஸ் அணி 14 போட்டிகளில் 16 புள்ளிகள் பெற்று நான்காவது இடம்பிடித்து பிளே-ஆப் சுற்றுக்கும் தகுதி பெற்றுவிடும்.

இவை நடந்து விடாமல் இருக்க, ஆர்சிபி அணியின் ரசிகர்கள் வேண்டிக்கொள்கின்றனர். ஏனெனில் ஆர்சிபி அணி வெற்றி பெற்றாலே ரன்ரேட் அடிப்படையில் பிளே-ஆப் செல்வதற்கும் வாய்ப்புகள் இருக்கின்றது.

ஹைதராபாத் அணி 200 ரன்கள் அடித்துள்ளது. 201 ரன்கள் இலக்கை 11.1 ஓவர்களில் மும்பை அணி கடந்தால், ஆர்சிபி அணியின் ரன்ரேட்டை மும்பை அணி தாண்டும்.