“ஒரே ஆள் மொத்த டோர்னமெண்ட்டையும் வின் பண்ணுவாரு.. ஆனா இந்தியா இவரை என்ன பண்ண போகுதோ?!” – இந்திய முன்னாள் வீரர் கவலை!

0
729
ICT

இன்று குஜராத் அகமதாபாத் உலகின் மிகப்பெரிய மைதானத்தில் 13வது ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் மிக பிரம்மாண்டமாக துவங்குகிறது.

இன்று துவங்கும் உலகக் கோப்பையின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து மற்றும் கடந்த முறை இறுதிப் போட்டிகள் தோல்வி அடைந்த நியூசிலாந்து அணிகள் மோதிக் கொள்கின்றன.

- Advertisement -

இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் அக்டோபர் எட்டாம் தேதி சென்னையில் ஆஸ்திரேலியாவையும், மூன்றாவது ஆட்டத்தில் பாகிஸ்தானை குஜராத் அகமதாபாத் மைதானத்திலும் எதிர்கொள்கிறது.

உலகக் கோப்பைக்கு முன்பாக இந்தியாவுக்கு வழங்கப்பட்டிருந்த இரண்டு பயிற்சி ஆட்டங்களும் மழையின் காரணமாக ஒரு பந்து கூட வீசாமல் ரத்து செய்யப்பட்டது. இந்திய அணி போதுமான கிரிக்கெட் விளையாடி இருந்தாலும் கூட, பயிற்சி ஆட்டம் இல்லாமல் போனது பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது.

தற்போது இந்திய அணியின் பிளேயிங் லெவனில் ஆறு பந்துவீச்சாளர்கள் இருப்பார்களா? அல்லது ஐந்து பந்துவீச்சாளர்கள் மற்றும் கூடுதல் பேட்ஸ்மேன் இருப்பாரா? என்கின்ற கேள்வி இருக்கிறது. கூடுதல் பேட்ஸ்மேன் இடத்தை ஸ்ரேயாஸ், இஷான் கிஷான் மற்றும் சூரியகுமார் யாதவ் மூவரில் யாருக்கு தருவார்கள் என்கின்ற கேள்வியும் இருக்கிறது.

- Advertisement -

இதுகுறித்து பேசி உள்ள ஹர்பஜன்சிங் “சூரியகுமார் யாதவை ஆவலுடன் எதிர்நோக்குகிறேன். அவர் களத்தில் இறங்கினால் ஆட்டத்தை மட்டும் வெல்லக் கூடியவர் அல்ல, தொடரையே வெல்லக் கூடியவர். நான் தேர்வாளராக இருந்தால் அவரைத்தான் இரண்டாவது வீரராக இந்திய அணிக்கு தேர்வு செய்வேன். கேப்டனுக்கு பிறகு எனது அணியில் உள்ள வீரர் அவர்தான்.

நான் அணி நிர்வாகத்தில் இருந்தால் சூரியகுமார் யாதவ் நிச்சயம் விளையாடுவார். ஆனால் இவர்கள் அவரை விளையாடுவார்களா? இல்லையா? என்று நமக்கு நிச்சயம் தெரியாது.

அவரைப் பற்றி என்னவென்று எனக்கு தெரியவில்லை ஆனால் நான் இப்பொழுது அவருக்கு பந்து வீச பயப்படுவேன். அதாவது நான் பார்மில் இருந்த பொழுது கிடையாது. அவர் எனக்கு ஏபி டிவில்லியர்ஸ்சை நினைவுபடுத்துகிறார்.

ஒரு போட்டியில் தோல்வி அடைந்தாலும் மீதமுள்ள போட்டிகளில் அவர் விளையாட வேண்டும். இவர் கருத்து நான் எதிர் நோக்கும் இன்னொரு வீரர் கில். அவர் இந்த தொடரில் நாம் மறக்க முடியாத ஏதோ ஒன்றை செய்வார்!” என்று நினைக்கிறேன்!