“ஒரு பையன்.. மொத்த இந்திய டீமுக்கும் எனர்ஜி தராரு.. செம டெவலப்!” – காலிஸ் பாராட்டு!

0
2184
Kallis

இந்திய அணி தற்போது தென் ஆப்பிரிக்கா சுற்றுப்பயணத்தில் இருக்கிறது. தென் ஆப்பிரிக்காவில் மூன்று வடிவிலான கிரிக்கெட் தொடர்களிலும் விளையாடும் இந்திய அணி, நேற்று மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டியில் விளையாட இருந்தது.

இந்த நிலையில் நேற்று டர்பனில் பெய்த மழை முதல் போட்டியில் ஒரு பந்தை கூட வீச விடாமல் நிறுத்திவிட்டது. தென் ஆப்பிரிக்க அணியை விட இந்த போட்டி இந்திய அணிக்கு மிகவும் முக்கியமானதாக அமைந்திருந்தது. எனவே ரசிகர்களை விட இந்திய கிரிக்கெட் நிர்வாகம் மிகுந்த ஏமாற்றத்தை சந்தித்திருக்கும்.

- Advertisement -

இந்திய டி20 அணி தற்போது இளம் வீரர்களைக் கொண்டு ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக விளையாட வைக்கப்படுகிறது. ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி போன்ற முன்னணி மூத்த வீரர்கள் யாரும் இடம் பெறவில்லை. மேற்கொண்டு வருவார்களா என்றும் தெரியவில்லை.

இந்த நிலையில் அடுத்த வருடம் நடைபெறும் டி20 உலக கோப்பையில் தற்போது இந்திய டி20 அணியில் இடம் பெற்று இருக்கும் இளம் வீரர்களில் யார் இடம் பெறுவார்கள் என்பது முழுமையாக தெரியாத விஷயமாக இருந்து வருகிறது.

அதே சமயத்தில் துவக்க இடத்தில் ஜெய்ஷ்வால், இறுதிக்கட்ட பினிஷிங் இடத்தில் ரிங்கு சிங் இருவரும் கட்டாயம் இந்திய டி20 உலகக் கோப்பை அணியில் இடம் பெறுவார்கள் என்று பலராலும் கூறப்படுகிறது.

- Advertisement -

ஜெய்ஸ்வால் அச்சமற்ற பேட்டிங்கை துவக்கத்தில் கொடுக்கிறார். அவர் தனது விக்கெட்டையோ, இடத்தையோ பற்றிகவலைப்படுவது கிடையாது. இதற்கு நேர் மாறாக சூழ்நிலைக்கு தகுந்தவாறு ஆட்டத்தை முடிப்பதில் ரிங்கு சிங் வல்லவராக இருக்கிறார். களத்தில் அவர் காட்டும் அமைதி மற்றும் தெளிவு ஆச்சரியப்படுத்தக் கூடியதாக இருக்கிறது.

ரிங்கு குறித்து தென் ஆப்பிரிக்க லெஜன்ட் ஜாக் காலிஸ் கூறும்பொழுது “அவர் ஒரு கிளாஸ் ஆக்ட். அவர் கடந்த சில மாதங்களாக இந்திய அணிக்கு என்ன செய்திருக்கிறார்? என்பது உங்களுக்கு தெரியும். அவர் மிகச் சிறப்பாக ஆட்டத்தை முடித்து வைக்கிறார். அது வெறும் சில்லி கிரிக்கெட் கிடையாது. தரமான கிரிக்கெட் ஷாட்கள் விளையாடி அந்த வேலையை செய்கிறார். தேவைப்படும் பொழுது அவரால் அதிரடியாக தாக்கி விளையாட முடியும். பேட்டிங்கில் ஆறாவது இடத்துக்கு பொருத்தமானவர் அவர்.

அவரால் மற்றவர்களுடன் சேர்ந்து அபாரமாக ஒரு ஆட்டத்தை முடிக்க முடியும். யாராவது சரியாக விளையாட முடியாமல் போனாலும் கூட, அவர் அந்த பொறுப்பை ஏற்று ஆட்டத்தை முடிப்பார். கடைசி இடத்தில் ரிங்கு சிங் இருக்கின்ற காரணத்தினால், மற்ற பேட்ஸ்மேன்கள் தைரியமாக விளையாட முடிகிறது!” என்று கூறி இருக்கிறார்!