சர்வதேச கிரிக்கெட்டில் பாகிஸ்தான் அணியை பெரிய நாடுகளுடன் விளையாட வைக்க கூடாது என இந்திய முன்னாள் கேப்டன் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் கடுமையான முறையில் விமர்சனம் செய்திருக்கிறார்.
நடப்பு ஆசியக் கோப்பை தொடரில் முதல் சுற்றில் பாகிஸ்தான் அணி இந்திய அணியிடம் படுதோல்வி அடைந்தது. தொடர்ந்து இரண்டாவது சுற்றில் நாளை இந்திய அணிக்கு எதிராக மீண்டும் விளையாட இருக்கிறது. தற்போது இதைத் தாண்டி இரு அணிகளுக்கும் நடுவில் சில சர்ச்சையான சம்பவங்கள் சென்று கொண்டிருக்கிறது.
தடுமாறும் பாகிஸ்தான் அணி
தற்போதுள்ள பாகிஸ்தான் அணி மிகவும் பலவீனமாக இருக்கிறது. சிறிய நாடுகளுக்கு எதிராகவும் பெரிய செயல் திறனை வெளிப்படுத்த முடியவில்லை. பாபர் அசாம் மற்றும் முகமது ரிஸ்வான் இருவரை நீக்கி இளம் வீரர்களை கொண்டு வந்த போதிலும் அந்த அணி தடுமாறவே செய்கிறது.
தற்போதைய பாகிஸ்தான் டி20 அணிக்கு புதிய கேப்டனாக சல்மான் அலி ஆகா நியமிக்கப்பட்டிருக்கிறார். ஆனால் அவரால் பேட்டிங்கில் மிடில் வரிசையில் வெற்றிகரமாக செயல்பட முடியவில்லை. அவருடைய ஸ்டிரைக் ரேட் சமீபத்தில் 120 க்கும் கீழே இருக்கிறது. காரணத்தினால்தான் பாபர் அசாம் மற்றும் முகமது ரிஸ்வான் நீக்கப்பட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
பாகிஸ்தான் சென்னை லீக் அணி
இதுகுறித்து கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் கூறும் பொழுது ” இது போன்ற ஒரு மதிப்புமிக்க தொடரில் விளையாட வாய்ப்பு கிடைத்திருப்பது பாகிஸ்தானுக்கு பெரிய விஷயம். அவர்கள் ஒரு சிறந்த அணி என்றும், அவர்கள் இந்திய அணிக்கு எதிராக கடைசி போட்டியில் துரதிஷ்டவசமாக தோற்று விட்டார்கள் எனவும் அவர்களுடைய பயிற்சியாளர் நாளை வந்து சொல்லுவார். மைக் ஹெசன் அவர்களுக்கு பயிற்சியாளராக இருக்கும் வரையில் எதுவும் நல்லது நடக்காது”
இதையும் படிங்க: வெறும் 120 ஸ்ட்ரைக் ரேட்.. கம்பீர் சாம்சனை வச்சு திரும்ப தப்பு பண்றார்.. இதைத்தானே செஞ்சிருக்கணும் – வாசிம் ஜாபர் விமர்சனம்
“இனிமேல் பாகிஸ்தான் முக்கிய அணிகளுடன் விளையாட கூடாது. பாகிஸ்தான் அணியை அசோசியேட் நாடுகளுடன் சேர்த்து அங்கிருந்து சிறப்பாக விளையாடும் ஒரு அணியை இங்கு கொண்டு வர வேண்டும். மேலும் இந்த அணியை முதல் ஏழு இடங்களில் இருந்து நீக்க வேண்டும். இனிமேல் இந்தியா பாகிஸ்தான் போட்டிகள் கூட்டத்தை ஈர்க்காது. அது முடிந்து போன வரலாறாகிவிட்டது. இத்துடன் இந்த பாகிஸ்தான் அணி எந்த பயத்தையும் நமக்கு தராது. இது சென்னை லீகில் ஏழாவது டிவிஷன் அணி” இன்று கடுமையாக விமர்சனம் செய்திருக்கிறார்.






