2021 டி20 உலகக் கோப்பையில் ஒவ்வொரு அணியிலும் உள்ள இளம் மற்றும் மூத்த வீரர்

0
72
Oldest and Youngest Players in T20WC 2021

2021 ஐசிசி ஆண்கள் டி20 தொடர் யுஏஇ மற்றும் ஓமனில் தொடங்கியது. முதல் சுற்றுக்குப் பின்னர் 12 அணிகள் சூப்பர் 12ல் மோதிக் கொண்டுள்ளன. குரூப்-ஏ யில் தென்னாபிரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா,இலங்கை, வெஸ்ட் இண்டீஸ் மற்றும் வங்கதேசம் இடம்பெற்றுள்ளன. இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான், நமீபியா மற்றும் ஸ்காட்லாந்து ஆகிய அணிகள் குரூப்-பி யில் உள்ளன. வயது என்பது வெறும் எண் தான் என்று பல சாதனையாளர்கள் நமக்கு நிரூபித்துவிட்டனர். 2021 டி20 உலகக்கோப்பையில் ஆடும் ஒவ்வொரு அணியிலும் உள்ள மூத்த மற்றும் இளம் வீரர்களைப் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.

இலங்கை

இலங்கை அணியின் அனுபவமாக வீரர், தினேஷ் சண்டிமல். அவருக்கு வயது 31. நடப்பு இலங்கை அணியில் பல புதிய வீரர்கள் ஆடிவருகின்றனர். அவர்களில் மிக இளமையான வீரர், 21 வயதே ஆன மகேஷ் தீக்ஷனா.

- Advertisement -

நமீபியா

37 வயதான கிரெய்க் வில்லியம்ஸ் நமீபியாவின் மூத்த வீரராக திகழ்கிறார். ஈவ்வணியின் இளம் வீரர், ஜேன் நிக்கோல் லாப்டீ – இடோன் ஆவார். அவருடைய வயது 20 வருடங்கள் ஆகின்றன.

ஆப்கானிஸ்தான்

ஆப்கானிஸ்தான் அணியின் கேப்டன் முஹம்மது நபி ஆவார். அவர் தான் ஆப்கானிஸ்தானின் மூத்த வீரர் என்று சொன்னால் அதில் ஆச்சரியப்பட ஒன்றுமே இல்லை. பல வருடங்களாக அவர் அந்நாட்டிற்கு பங்களித்து வருகிறார். அவரின் வயது 36 ஆகும். நடப்பு டி20 உலகக்கோப்பையில் ஆடும் இளம் வீரர்கள் பட்டியலில் முதலில் இருப்பது, ஆப்கானிஸ்தானின் ரஹ்மனுள்ளா குர்பாஸ். இத்தொடரில் கலந்துகொள்ளும் ஒரே 19 வயதான வீரர் இவரே.

வங்கதேசம்

கேப்டனாக செயல்படும் மற்றொரு மூத்த வீரர், 35 வயதான மஹமதுல்லா. வங்கதேச அணியின் இளம் வீரர், ஷோரிபுல் இஸ்லாம். இந்த 20 வயதான வேகப்பந்து வீச்சாளர் சசிறப்பாக ஆடி அணிக்கு முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தித் தருகிறார்.

- Advertisement -

இங்கிலாந்து

ஆப்கானிஸ்தான் & வங்கதேசத்தைப் போல இங்கிலாந்து அணியிலும் கேப்டன் தான் மூத்த வீரராக உள்ளார். உலகக்கோப்பை வென்ற கேப்டன் மோர்கனின் வயது 34 ஆகும். சாம் கர்ரனின் சகோதரன் டாம் கர்ரன், இங்கிலாந்து அணியின் இளம் வீரர் ஆவார். அவரின் வயது 26 ஆண்டுகள். தற்செயலாக இந்த இரண்டு வீரர்களும் மற்ற நாட்டில் இருந்து வந்து இங்கிலாந்திற்காக ஆடுகின்றனர்.

தென்னாபிரிக்கா

தென்னாபிரிக்காவின் அதிரடி பேட்ஸ்மேன் வான் டர் டுசனுக்கு 32 வயதாகிறது. அவர் தான் அவ்வணியின் மூத்த வீரர். இளம் வீரர்கள் பட்டியலில் முதலில் இருப்பவர் 23 வயதான வியான் முல்டர்.

ஸ்காட்லாந்து

ஸ்காட்லாந்து அணியின் மூத்த வீரர், கைலி கோயிட்ஸர். 37 வயதாகும் இவ்வீரர் ஸ்காட்லாந்து அணியை இத்தொடரில் வழிநடத்தி வருகிறார். பிராட் வீல், இளம் வீரர் ஆவார். அவரின் வயது 23.

நியூசிலாந்து

34 வயதாகும் மூத்த வீரரின் பெயர் டாட் அஸ்டில். நியூசிலாந்து அணியில் உள்ள இளம் வீரர், கிளென் பிலிப்ஸ். அவருடைய வயது 24. இத்தொடரில் தன்னுடைய அணிக்காக அவர் விக்கெட் கீப்பராக செயல்படுகிறார்.

வெஸ்ட் இண்டீஸ்

இரண்டு முறை டி20 உலகக் கோப்பையை கைப்பற்றிய வெஸ்ட் இண்டீஸின் அதிக வயதான வீரர், கிறிஸ் கெயில். 41 வயதாகும் அதிரடி ஆட்டக்காரர் கெயில் இவ்வுலகக் கோப்பையுடன் ஓய்வுப் பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 24 வயதான வேகப்பந்து வீச்சாளர் ஓஷேன் தாமஸ், மேற்கிந்திய தீவுகளின் இளம் வீரர் ஆவார்.

இந்தியா

இந்திய அணியின் மூத்த மற்றும் இளம் வீரர் இருவருமே ஸ்பின்னர்கள். ஆஃப் பிரேக் பவுலர், அஸ்வினின் வயது 35. ஆகும். 23 வயதான இளம் வீரர் ராகுல் சாஹர், லெக் பிரேக் பவுலர் ஆவார். அஸ்வினின் வருகை அனைவருக்கும் பெரும் ஆச்சர்யத்தை உண்டாக்கியது.

பாகிஸ்தான்

டி20 போட்டிகள் அமல்படுத்தியது முதல் தற்போது வரை முஹம்மது ஹபீஸ், பாகிஸ்தான் அணிக்காக ஆடுகிறார். 40 வயதாகியும் தொடர்ந்து நாட்டிற்காக பங்களிது வருகிறார். பாகிஸ்தான் அணியில் உள்ள இளம் வீரரின் வயது 20. அவர் பெயர் முஹம்மது வாசிம்.

ஆஸ்திரேலியா

இதற்கு முன் சர்வதேச டி20யில் களமிறங்காதவர், ஜோஸ் இங்கிலிஸ். 26 வயதாகும் இங்கிலிஸ் தான் அவுஸ்ரேலியா அணியில் உள்ள இளம் வீரர். வயதான வீரர், டேன் கிறிஸ்டியன் ஆவார். அவரது வயது 38 ஆண்டுகள்.