கொஞ்ச நஞ்சம் இல்ல… இங்கிலாந்தை பார்த்து இந்தியா ரொம்பவே பயந்துட்டாங்க – முன்னாள் இங்கிலாந்து கேப்டன் கருத்து!

0
608

இங்கிலாந்தை பார்த்து இந்திய அணி நிறையவே பதறிவிட்டது என்று கடும் விமர்சனத்தை முன் வைத்திருக்கிறார் இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் நாசர் ஹுசைன்.

டி20 உலகக்கோப்பை அரையறுதி போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 168 ரன்கள் மட்டுமே அடித்திருந்தது. இந்த மைதானத்தில் குறைந்தபட்சம் 180 ரன்களுக்கு மேல் அடித்தால் எளிதாக கட்டுப்படுத்த முடியும் என்ற நிலை இருந்தபோது, இந்திய அணியின் ஸ்கோர் 10 முதல் 20 ரன்கள் குறைவாக இருந்ததால் பந்துவீச்சில் தாக்கம் ஏற்படுத்த வேண்டிய நிலை இருந்தது.

- Advertisement -

ஆனால் இந்திய அணியின் பந்துவீச்சை எந்தவித சிக்கலும் இல்லாமல் இங்கிலாந்தின் துவக்க வீரர்கள் மற்றும் ஜோஸ் பட்லர், அலெக்ஸ் ஹேல்ஸ் இருவரும் துவம்சம் செய்தனர். அனுபவமிக்க புவனேஸ்வர் குமார் மற்றும் சமி இருவரின் பந்துவீச்சிலும் எந்தவித தாக்கமும் இல்லை. இது இந்திய அணிக்கு பெருத்த பின்னடைவை தந்து விட்டது.

இறுதியில் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி அபார வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு முன்னேறியது. படுதோல்வியை சந்தித்த இந்தியா பல்வேறு விமர்சனங்களை சந்தித்து வருகிறது.

இந்நிலையில் இந்திய அணி இங்கிலாந்தின் பேட்ஸ்மேன்கள் பயந்துவிட்டனர். பழைய இந்தியாவை பார்த்தது போல இருந்தது என்று கருத்து தெரிவித்திருக்கிறார் இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் நாசர் ஹுசைன்.

- Advertisement -

“இரு அணிகளும் இப்போட்டியில் விளையாடிய விதம் முற்றிலும் வேறுபட்டதாக இருந்தது. இந்தியா பவர்-பிளே ஓவர்களில் தட்டுத்தடுமாறி விளையாடியது. ஆனால் எந்தவித பதட்டமும் இன்றி இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் பவர்-பிளே ஓவர்களில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி விட்டனர்.

இந்திய அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் இன்னும் பழைய அணுகுமுறையிலேயே இருக்கிறார்கள். புதிய மாற்றங்களை ஏற்றுக்கொண்டு பேட்டிங்கை பலப்படுத்த வேண்டும். இதை இந்தியாவின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி வர்ணனையின் போதும் குறிப்பிட்டார். ஆனால் அதற்கு இந்தியா செவிசாய்க்கவில்லை.

இங்கிலாந்து அணியில் எப்பேர்ப்பட்ட பேட்ஸ்மேன்கள் இருக்கிறார்கள் என்பதை புரிந்து கொண்டு, அதற்கு ஏற்றவாறு இந்திய அணி ஸ்கோர் செய்திருக்க வேண்டும். 170 ரன்கள் என்பது இங்கிலாந்து போன்ற அணிக்கு எப்படி போதுமானதாக இருக்கும்? எளிதில் எப்படி கட்டுப்படுத்த முடியும்? ஆகையால் அரையிறுதி போட்டியில் இந்திய அணி எந்தவித திட்டமும் இன்றி விளையாடி இருப்பதாக தெரிந்தது.” என்றார்