எரியும் நெருப்பில் எண்ணெய்.. சிஎஸ்கே-விற்காக ரோகித் சர்மா மனைவி வெளியிட்ட பதிவு.. காரணம் என்ன?

0
2373
Rohit

தற்பொழுது இந்திய கிரிக்கெட்டில் மிகப்பெரிய விவாதப் பொருளாக, ஐபிஎல் தொடரின் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து ரோஹித் சர்மாவை நீக்கி, ஹர்திக் பாண்டியாவை கொண்டு கொண்டு வந்த விஷயம் மாறி இருக்கிறது.

தற்பொழுது இந்திய அணி தென் ஆப்பிரிக்காவிற்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. ஆனால் இந்த சுற்றுப்பயணம் குறித்து இந்திய கிரிக்கெட்டில் எல்லா செய்திகளும் கீழே போய் உள்ளது.

- Advertisement -

மும்பை இந்தியன்ஸ் கேப்டன் பொறுப்பில் ரோகித் சர்மா நீக்கப்பட்ட செய்தி, இந்திய கிரிக்கெட்டின் முக்கிய செய்தியாக தற்பொழுது மாறி இருக்கிறது. இதுவே விவாதமாகவும் மாறி சமூக வலைதளங்களில் தீயாய் எரிந்து கொண்டிருக்கிறது.

ஒருபுறம் ரோகித் சர்மாவின் ரசிகர்கள் இந்த விஷயத்திற்கு முழு எதிர்ப்பு தெரிவித்து சமூக வலைதளங்களில் களமாடி வருகிறார்கள். இன்னும் கொஞ்சம் மேலே போய் மும்பை இந்தியன்ஸ் ஜெர்சியை எரித்து வீடியோ வெளியிடுகிறார்கள்.

ரசிகர்கள் ஒருபுறம் இப்படியாக எதிர்ப்பை காட்டிக் கொண்டிருக்கும் போது, சூரியகுமார் யாதவ் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உடைந்த இதயம் இருக்கும் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு தன்னுடைய எதிர்ப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.

- Advertisement -

இத்தோடு சேர்த்து சூரியகுமார் யாதவியின் மனைவி ” மக்களை எப்படி நடத்துகிறோம் என்கின்ற விதம் எப்பொழுதும் ஞாபகத்தில் இருக்கும்” என்று ஒரு பதிவை இட்டு பின்பு அதை நீக்கியும் இருக்கிறார்.

இது போதாது என்று தமிழகத்தின் முன்னாள் இந்திய வீரரும் சிஎஸ்கே அணியின் முன்னாள் வீரருமான சுப்ரமணியம் பத்ரிநாத் சிஎஸ்கே ஜெர்சியில் ரோஹித் சர்மா புகைப்படத்தை வெளியிட்டு பரபரப்பை கூட்டினார்.

மேலும் சிஎஸ்கே தாங்கள் எப்பொழுதும் ரோகித் சர்மாவை உயர்வாக மதிப்பதாக ஒரு வீடியோவை வெளியிட்டு தங்களுடைய விளையாட்டு உணர்வை வெளிப்படுத்தியது.

இப்படி தொடர்ச்சியாக ரோகித் சர்மா கேப்டன் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்ட விவகாரம் பற்றி எரிய, அதில் எண்ணெயை ஊற்றும் விதமாக ரோகித் சர்மா மனைவி ரித்திகா அவர்கள், சிஎஸ்கே ரோகித் சர்மாவுக்கு வெளியிட்ட பதிவில் மஞ்சள் நிற இதய குறியீட்டை கமெண்ட் செய்திருக்கிறார்.

இதன் காரணமாக ரோஹித் சர்மா மும்பை இந்தியன் அணி நிர்வாகத்தின் மீது அதிருப்தியில் இருப்பதாகவும், சூரியகுமார் மனைவி, ரோகித் சர்மா மனைவி வரை தங்களால் முடிந்த எதிர்வினைகளை செய்வதாகவும் ரசிகர்கள் தங்களுடைய யூகத்தின் பதிவுகளை பதிவு செய்து வருகிறார்கள். தற்பொழுது சமூக வலைதளம் இது குறித்து மிகவும் பரபரப்பாக மாறி இருக்கிறது!