Odi பேட்டிங் ரேங்கிங்.. கில் இதுவரை இல்லாத அளவு உயர்வு.. விராட் ரோகித் இடம் என்ன? – விபரங்கள் இதோ!

0
808
ICT

டி20 கிரிக்கெட் வருகைக்கு பிறகு டெஸ்ட் கிரிக்கெட் மெல்ல மெல்ல மறைந்து விடும் என்று பலரும் அச்சப்பட்டார்கள். ஆனால் நடந்தது என்னவோ யாரும் எதிர்பார்க்காத ஒரு விஷயம்!

கிரிக்கெட் உலகில் டி20 கிரிக்கெட் மிகப்பெரிய ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்ததும், சுதாரித்துக் கொண்ட ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட் காப்பாற்றுவதற்கு, ஆடுகளங்களை முடிவு தெரிகின்ற வகையில் கிரிக்கெட் வாரியங்களை அமைக்க சொன்னது. அடுத்து டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரை இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை கொண்டு வந்தது.

- Advertisement -

ஐசிசியின் இந்த நடவடிக்கையால் கிரிக்கெட்டின் உண்மையான வடிவமான டெஸ்ட் கிரிக்கெட் பிழைத்துக் கொண்டது. ஆனால் அதே சமயத்தில் ஒருநாள் கிரிக்கெட் தன்னுடைய செல்வாக்கை இழக்க ஆரம்பித்து விட்டது.

இந்த நிலையில் இந்த ஆண்டு ஒருநாள் கிரிக்கெட்டுக்கான ஆண்டாக அமைந்திருக்கிறது. நான்கு வருடத்திற்கு ஒருமுறை நடைபெறும் ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை, இந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற இருக்கிறது. இதற்கு தயாராகும் விதமாக இதில் பங்கேற்க இருக்கும் 10 அணிகளும் பல்வேறு வகையான ஒருநாள் கிரிக்கெட் தொடர்களில் விளையாடுகின்றன. இதனால் தற்பொழுது ஒருநாள் கிரிக்கெட் வடிவத்திற்கு ஒரு சிறு எழுச்சி கிடைத்திருக்கிறது.

தற்போது ஒரு நாள் கிரிக்கெட் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசைப் பட்டியலை ஐசிசி வெளியிட்டு இருக்கிறது. இதில் இந்திய இளம் துவக்க ஆட்டக்கார சுப்மன் கில் தன்னுடைய அதிகபட்ச தரவரிசை நிலையை எட்டி இருக்கிறார். அவர் தற்போது நான்காவது இடத்தை பிடித்திருக்கிறார்.

- Advertisement -

இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன்களான விராட் கோலி ஒன்பதாவது இடத்தில் நீடிக்கிறார். இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா 11 வது இடத்தில் தொடர்ந்து இருந்து வருகிறார். ஒருநாள் கிரிக்கெட்டில் இந்திய கிரிக்கெட்டுக்கு நம்பிக்கை அளிக்கும் விதமாக இந்த மூன்று பேரும் இருந்து வருகிறார்கள்.

ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் பேட்டிங் தரவரிசையில் முதல் 10 இடத்தில் இருக்கும் பேட்ஸ்மேன்கள்:

பாபர் ஆஸம் – 880

ராஸ்ஸி வான் டெர் டுசென் – 777

இமாம்- உல்- ஹக் – 752

சுப்மன் கில் – 743

ஃபகார் ஜமான் – 740

ஹாரி டெக்டர் – 726

டேவிட் வார்னர் – 726

குயின்டன் டிகாக் – 718

விராட் கோலி – 705

ஸ்டீவ் ஸ்மித் – 702