சூடுபிடிக்கும் உலகக்கோப்பை குவாலிபயர்: ஜிம்பாப்வே, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் அபார வெற்றி!

0
7797

உலகக்கோப்பை குவாலிபயர் போட்டியில குரூப் ஏ பிரிவில் இடம் பெற்றுள்ள ஜிம்பாப்வே மற்றும் வெஸ்ட் இண்டீஸ் ஆகிய இரண்டு அணிகளும் தங்களது முதல் போட்டியில் அபார வெற்றியை பதிவு செய்துள்ளனர்.

இந்த வருடம் 50-ஓவர் உலகக்கோப்பை இந்தியாவில் நடைபெறுகிறது. வருகிற அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் நடைபெறும் இந்த உலக கோப்பையில் மொத்தம் 10 அணிகள் பங்கேற்கின்றன. அதில் எட்டு அணிகள் தரவரிசை பட்டியல் அடிப்படையில் உறுதியாகிவிட்டது. மீதம் இருக்கும் இரண்டு அணிகள் குவாலிஃபயர் போட்டிகள் அடிப்படையில் தேர்வு செய்யப்படும்.

- Advertisement -

உலகக்கோப்பை குவாலிபயர் போட்டி ஜிம்பாப்வேயில் நடைபெற்று வருகிறது. இதில் மொத்தம் 10 அணிகள் விளையாடுகின்றன. இரண்டு பிரிவுகள் தலா ஐந்து அணிகளாக பிரிக்கப்பட்டு போட்டிகள் நடைபெறுகிறது.

குரூப் ஏ பிரிவில் ஜிம்பாப்வே, நெதர்லாந்து, வெஸ்ட் இண்டீஸ், யுனைடெட் ஸ்டேட்ஸ் ஆப் அமெரிக்கா, நெதர்லாந்து, நேபால் ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன. குரூப் பி பிரிவில் இலங்கை, அயர்லாந்து, ஓமன், ஸ்காட்லாந்து, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன.

ஞாயிற்றுக்கிழமை துவங்கிய உலகக்கோப்பை குவாலிபயர் போட்டியில் குரூப் ஏ பிரிவில் இடம்பெற்றுள்ள 4 அணிகளுக்கு இடையே 2 போட்டிகள் நடைபெற்றன. முதலில் நடைபெற்ற நேபாளம் மற்றும் ஜிம்பாப்வே ஆகிய இரு அணிகளும் மோதின.

- Advertisement -

ஜிம்பாப்வே அணி டாஸ் வென்று முதலில் பவுலிங் எடுத்தது. நேபாளம் அணிக்கு ஓபனிங் பார்ட்னர்ஷிப் 171 ரன்கள் சேர்த்தது. குஷால் பர்டெல் 99 ரன்கள், ஆஷிப் ஷேக் 66 ரன்கள் அடித்து அவுட்டாகினர். பின்னர் வந்த வீரர்கள் ஆங்காங்கே சிறு பார்ட்னர்ஷிப் அமைத்தனர். 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 290 ரன்கள் அடித்தது.

இதனை சேஸ் செய்த ஜிம்பாப்வே அணிக்கு கேப்டன் க்ரெய்க் எர்வின் மற்றும் சீன் வில்லியம்ஸ் இருவரும் அபாரமாக சதமடித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். எர்வின் 121 ரன்கள், சீன் வில்லியம்ஸ் 102 ரன்கள் அடித்திருந்தனர். 44.1 ஓவரில் 2 விக்கெட்டுகள் மட்டுமே இழந்து இலக்கை சேஸ் செய்தது ஜிம்பாப்வே அணி.

இரண்டாவது குவாலிபயர் லீக் போட்டியில் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதின. அமெரிக்கா அணி முதலில் பவுலிங் தேர்வு செய்தது பேட்டிங் இறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு சார்லஸ்(66), சாய் ஹோப்(54), ராஸ்டன் சேஸ்(55), ஜேசன் ஹோல்டர்(56) ஆகிய நால்வரும் அரைசதமடிக்க, 297 ரன்களுக்கு வெஸ்ட் இண்டீஸ் அணி ஆல் அவுட் ஆனது.

இதனை சேஸ் செய்த அமெரிக்கா அணிக்கு கஜானந்த் 101 ரன்கள் அடித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். ஷயன் ஜஹாங்கீர் 39 ரன்கள் மற்றும் நாஷ்துஷ் 34 ரன்கள் அடித்தனர். மற்றவர்கள் சொற்பரன்களுக்கு ஆட்டமிழக்க, 50 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 258 ரன்கள் மட்டுமே அடித்தது அமெரிக்கா அணி. 39 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்றது.