சொல்லாம கொல்லாம சீனியர் வீரரை நீக்கிய பிசிசிஐ.. இலங்கை தொடருக்கான ஓடிஐ அணி அறிவிப்பு! கேப்டன் ரோகித் தான்; ஆனா பண்டியாவிற்கு பொறுப்பு!

0
10614

இந்தியா மற்றும் இலங்கை அணிகள் விளையாடும் ஒருநாள் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய அணி வங்கதேசம் அணியுடன் டெஸ்ட் தொடரை முடித்துவிட்டு, அடுத்ததாக ஜனவரி மாதம் 3ம் தேதி முதல் 15ம் தேதி வரை இலங்கை அணி உடனான டி20 மற்றும் ஒருநாள் தொடர்களில் விளையாடுகிறது.

- Advertisement -

முதல் கட்டமாக நடைபெறும் டி20 தொடர் 3ம் தேதி முதல் 7-ம் தேதி வரை நடைபெறுகிறது. அடுத்ததாக 10ம் தேதி முதல் 15ம் தேதி வரை 3 ஒருநாள் போட்டிகள் நடக்க உள்ளது. இந்த இரண்டு தொடர்களுக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டிருக்கிறது.

டி20 தொடரில் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா இருவரும் நீக்கப்பட்டிருக்கின்றனர். ஹர்திக் பாண்டியா கேப்டன் ஆக நியமிக்கப்பட்டு இருக்கிறார். ஒருநாள் தொடரில் இருந்து எதிர்பாராத விதமாக ஷிகர் தவான் நீக்கப்பட்டு இருக்கிறார்.

கேஎல் ராகுல் டி20 தொடரில் சொந்த காரணங்களுக்காக விளையாடவில்லை. ஒருநாள் தொடரின்போது மீண்டும் அணிக்கு திரும்புகிறார். ஹர்திக் பாண்டியாவிற்கு ஒருநாள் தொடரில் துணை கேப்டன் பொறுப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது. கேஎல் ராகுல் துணை கேப்டனாக முன்பு இருந்தார் தற்போது அவருக்கு எந்த பொறுப்பும் கொடுக்கப்படவில்லை.

- Advertisement -

ரவீந்திர ஜடேஜா ஒருநாள் தொடரில் இடம் பெறுவார் என எதிர்பார்ப்பு நிலவியது ஆனால் அவருக்கு இடம்பெறவில்லை. சஹல் மற்றும் குல்தீப் ஜோடி மீண்டும் ஒன்றாக விளையாடுகின்றனர்.

ஒருநாள் போட்டிகளில் பங்கேற்கும் இந்திய அணி:

ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல், இஷான் கிஷன், ஹர்திக் பாண்டியா(துணை கேப்டன்), வாஷிங்டன் சுந்தர், யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ், அக்சர் படேல் , முகமது. ஷமி, முகமது. சிராஜ், உம்ரான் மாலிக், அர்ஷ்தீப் சிங்.