ODI.. அடித்தது 201 ரன்.. ஜெயித்தது 142 ரன் வித்தியாசம்.. ஆப்கானிஸ்தானை அடித்து சுருட்டிய பாகிஸ்தான்.. தெறி ஃபாஸ்ட் பவுலிங் யூனிட்!

0
3333
Rauf

பாகிஸ்தான் அணி ஆசியக் கோப்பை தொடருக்கு முன்பாக மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக இலங்கையில் வைத்து விளையாடி வருகிறது!

இந்த தொடரின் முதல் போட்டி இன்று நடைபெற்றது. இந்தப் போட்டிக்கான டாசில் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. பாபர் ஆஸமின் இந்த முடிவு முதலில் தவறு என்பது போலவே தெரிந்தது.

- Advertisement -

பாகிஸ்தான் அணியின் துவக்க ஆட்டக்காரர் இமாம் உல் ஹக் தவிர மற்ற முன்னணி நட்சத்திர பேட்ஸ்மேன்கள் அனைவரும் சொற்ப ரன்களில் வெளியேறி பாகிஸ்தான் ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார்கள்.

பகார் ஜமான் 2, பாபர் ஆஸம் 0, முகமது ரிஸ்வான் 21, ஆஹா சல்மான் 7, இப்திகார் அகமத் 30, சதாப் கான் 39, உசாமா மிர் 2, ஷாகின் அப்ரிடி 2, நசீம் ஷா 18* ரன்கள் எடுத்தார்கள். ஒரு முனையில் நிதானமாகவும் பொறுப்புடனும் விளையாடிய துவக்க ஆட்டக்காரர் இமாம் உல் ஹக் 61 ரன்கள் எடுத்தார்.

பாகிஸ்தான் அணி 47.1 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 21 ரன்களுக்கு ஆப்கானிஸ்தான் அணியிடம் சுருண்டது. ஆப்கானிஸ்தான் தரப்பில் முஜீப் உர் ரஹ்மான் 3, முகமத் நபி 2, ரஷீத் கான் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்கள்.

- Advertisement -

முதல் முறையாக ஒருநாள் கிரிக்கெட்டில் பாகிஸ்தான் அணியை வீழ்த்துவதற்கு ஆப்கானிஸ்தான் அணிக்கு ஒரு சிறந்த வாய்ப்பு கிடைத்திருந்தது. ஆப்கானிஸ்தான் வெல்லும் என்று கணிப்புகளும் இருந்தது. ஆனால் பாகிஸ்தான் அணியின் உலக தரம் வாய்ந்த வேகப்பந்து வீச்சு படை ஒட்டுமொத்த கணிப்பையும் தவிடு பொடி ஆக்கிவிட்டது.

ஆப்கானிஸ்தான் அணியின் துவக்க ஆட்டக்காரர் ரகமன்னுல்லா குர்பாஸ் 18, அசமத்துல்லா ஓமர்சாய் 16 ரன்கள் எடுத்தார்கள். இவர்கள் இருவரை தவிர எந்த ஒரு ஆப்கானிஸ்தான் பேட்ஸ்மேனும் இரட்டை இலக்க ரன்னுக்கு போகவே இல்லை. பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சில் அனல் பறந்தது.

இறுதியாக ஆப்கானிஸ்தான் அணி 19.2 ஓவரில் 59 ரன்களுக்கு பரிதாபமாக சுருண்டது. ஆப்கானிஸ்தான் அணியின் அதிவேக பந்துவீச்சாளர் ஹாரிஸ் ரவுப் 6.2 ஓவர்கள் பந்து வீசி, 2 மெய்டன் செய்து, 18 ரன்கள் விட்டுத் தந்து ஐந்து விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார். முடிவில் பாகிஸ்தான் அணி 142 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் தற்பொழுது முன்னிலை வகிக்கிறது!