ODI.. டேவிட் வார்னர் உலகச் சாதனை.. சச்சினை மகத்தான சாதனையில் இருந்து பின்னுக்கு தள்ளினார்!

0
12609
Warner

ஆஸ்திரேலியா அணி தற்போது மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை தென் ஆப்பிரிக்க சுற்றுப்பயணத்தில் முழுமையாக வென்று, தற்பொழுது 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது.

இந்த ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் நேற்று முன்தினம் நடைபெற்ற முதல் போட்டியில், பரபரப்பான கட்டத்தில் மூன்று விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் முன்னிலை வகித்தது.

- Advertisement -

இந்த நிலையில் தொடரின் இரண்டாவது போட்டி தற்பொழுது நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் முதலில் டாசில் வென்ற தென் ஆப்பிரிக்க அணி பந்துவீச்சை தேர்வு செய்து கொண்டது. ஆடுகளம் பேட்டிங் செய்வதற்கு சாதகமாக இருந்தது.

ஆஸ்திரேலியா துவக்க ஜோடியாக வந்த டிராவிஸ் ஹெட் மற்றும் டேவிட் வார்னர் இருவரும் ஆடுகளத்தின் சாதகத்தை மிகவும் அற்புதமாக பயன்படுத்தி அதிரடியான துவக்கத்தை ஏற்படுத்திக் கொடுத்தார்கள். பத்து ஓவர்களில் ஆஸ்திரேலியா அணி 100 ரன்கள் கடந்தது.

மிகவும் அதிரடியாக டி20 கிரிக்கெட்டில் விளையாடுவது போல விளையாடிய டிராவிஸ் ஹெட் அதிரடியாக அரை சதம் அடித்து, 36 பந்துகளில் 9 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள் உடன் 64 ரன்கள் எடுத்து, 11.5 ஓவரில் 109 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து ஆட்டம் இழந்தார்.

- Advertisement -

இதற்கு அடுத்து அவரது வேலையை எடுத்துக் கொண்ட டேவிட் வார்னர் மிகச் சிறப்பாக விளையாடி அரைசதம் கடந்தார். இதற்கு அடுத்து தொடர்ந்து விளையாடிய அவர் 85 பந்துகளில் அதிரடியாக சதம் அடித்தார். இவருக்கு இது ஒருநாள் கிரிக்கெட்டில் இருபதாவது சதமாகும்.

இந்தச் சதத்தின் மூலம் டேவிட் வார்னர், துவக்க வீரராக சச்சின் கைவசம் வைத்திருந்த மிகப்பெரிய சாதனையை தகர்த்து இருக்கிறார். டேவிட் வார்னருக்கு இது துவக்க வீரராக 46 ஆவது சர்வதேச சதம் ஆகும். இதன் மூலம் துவக்க வீரராக அதிக சர்வதேச சதங்கள் அடித்த வீரராக உலகச் சாதனை படைத்திருக்கிறார். சச்சின் துவக்க வீரராக 45 சதங்கள் அடித்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

டேவிட் வார்னர் டெஸ்ட் கிரிக்கெட்டில் 25 சதங்களையும், ஒருநாள் கிரிக்கெட்டில் 20 சதங்களையும், டி20 கிரிக்கெட்டில் 1 சதத்தையும் சர்வதேச அளவில் அடித்திருக்கிறார். மொத்தம் 46 சர்வதேச சதங்கள். மேலும் நடைபெற்று வரும் இந்த ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் டேவிட் வார்னர் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டம் இழந்தது குறிப்பிடத்தக்கது.