ODI பவுலர்ஸ் ரேங்க்.. சிராஜ் மீண்டும் NO.1.. ஆச்சரியப்படுத்தும் ஆப்கான் ஆஸி.. பாக் பின்னடைவு!

0
1899
Siraj

ஐசிசி மூன்று வடிவ கிரிக்கெட் போட்டிகளுக்கும் அணிகள் வீரர்கள் என தரவரிசை பட்டியலை உடனுக்குடன் புதுப்பித்து வெளியிட்டு வருவதை வாடிக்கையாக வைத்திருக்கிறது.

இந்த வகையில் இன்று பலரும் எதிர்பார்த்து இருந்த ஒரு நாள் கிரிக்கெட் பந்துவீச்சாளர்களின் தரவரிசையை ஐசிசி வெளியிட்டு இருக்கிறது. இதில் பல ஆச்சரியமான முடிவுகள் வெளிவந்திருக்கிறது.

- Advertisement -

பாகிஸ்தான அணி உலகின் தலைசிறந்த வேகப்பந்துவீச்சு கூட்டணியை வைத்திருக்கிறது என்று பலரும் கூறி வந்தார்கள். அந்தக் கூட்டணியில் இருந்த மூன்று பேரில் ஒருவர் மட்டும்தான் முதல் 10 இடங்களில் இருக்கிறார். அதுவும் பத்தாவது இடத்தில் இருக்கிறார். அவர் ஷாஹீன் ஷா அப்ரிடி.

இதற்கு அடுத்து இந்த தரவரிசை பட்டியலில் ஆஸ்திரேலியா பெரிய ஆதிக்கம் செலுத்தி வருகிறது. அந்த அணியின் ஹேசில்வுட், ஸ்டார்க் மற்றும் ஆடும் ஜாம்பா மூவரும் முதல் 10 இடங்களில் இருக்கிறார்கள்.

இதில் இன்னொரு ஆச்சரியப்படத்தக்க விஷயம் என்னவென்றால் ஆப்கானிஸ்தான் அணியைச் சேர்ந்த முஜீப் உர் ரஹ்மான் மற்றும் ரஷீத் கான் இருவரும் முதல் பத்து இடங்களில் இருக்கிறார்கள். மேலும் முகமது நபி மிகவும் நெருக்கமாக பன்னிரண்டாவது இடத்தில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

தற்பொழுது வெளியிடப்பட்டுள்ள ஒருநாள் கிரிக்கெட் பந்துவீச்சாளர்களுக்கான ஐசிசி தரவரிசை பட்டியலில் எல்லோரும் எதிர்பார்த்தது போல இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் முகமது சிராஜ்க்கு நிறைய முன்னேற்றம் கிடைத்திருக்கிறது.

அவர் 2003 ஆம் ஆண்டு ஜனவரி முதல் மார்ச் மாதம் வரையிலும் ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் பந்துவீச்சாளர்கள் தரவரிசை பட்டியலில் முதல் இடத்தில் இருந்தார். இதற்குப் பிறகு அந்த இடத்திற்கு ஆஸ்திரேலியா அணியின் ஹேசில்வுட் வந்தார்.

தற்பொழுது ஆசியக் கோப்பை தொடரில் அபாரமான செயல்பாட்டை வெளிப்படுத்தி 10 விக்கெட்டுகளை 12.2 ஆவரேஜில் வீழ்த்திய முகமது சிராஜ், எட்டு இடங்கள் கிடுகிடுவென்று முன்னேறி மீண்டும் முதல் இடத்தை பிடித்து அசத்தியிருக்கிறார். இந்த வரிசையில் ஒன்பதாவது இடத்தில் இந்திய சுழற் பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒருநாள் கிரிக்கெட் பந்து வீச்சாளர்களுக்கான ஐசிசி தரவரிசை பட்டியலில் முதல் 10 இடங்களில் இருக்கும் பந்துவீச்சாளர்கள் :

முகமது சிராஜ் இந்தியா 694 புள்ளிகள்
ஜாஸ் ஹேசில்வுட் ஆஸ்திரேலியா 678 புள்ளிகள்
டிரண்ட் போல்ட் நியூசிலாந்து 678 புள்ளிகள்
முஜிப் உர் ரஹ்மான் ஆப்கானிஸ்தான் 657 புள்ளிகள்
ரஷீத் கான் ஆப்கானிஸ்தான் 655 புள்ளிகள்
மிட்சல் ஸ்டார்க் ஆஸ்திரேலியா 652 புள்ளிகள்
மேட் ஹென்றி நியூசிலாந்து 645 புள்ளிகள்
ஆடம் ஜாம்பா ஆஸ்திரேலியா 642 புள்ளிகள்
குல்தீப் யாதவ் இந்தியா 638 புள்ளிகள்
ஷாஹீன் ஷா அப்ரிடி பாகிஸ்தான் 632 புள்ளிகள்