0, W, W, 0, 1, 2… இருபதாவது ஓவரில் நடராஜன் மாஸ் பவுலிங்… மீண்டும் பழைய ஃபார்முக்கு வரும் யார்க்கர் கிங்!

0
1915
Natarajan

ஐபிஎல் 16ஆவது சீசனின் 47வது போட்டி ஹைதராபாத் ராஜீவ் காந்தி மைதானத்தில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கும் இடையே நடைபெற்று வருகிறது!

இந்தப் போட்டியில் முதலில் டாசில் வெற்றி பெற்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தைரியமாக பேட்டிங்கை தேர்வு செய்து களம் இறங்கியது.

- Advertisement -

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் துவக்க ஆட்டக்காரர்கள் குர்பாஸ் தான் சந்தித்த முதல் பந்தியிலேயும், ஜேசன் ராய் 19 பந்தில் 20 ரன்களும் எடுத்து ஆட்டம் இழந்தார்கள். வெங்கடேஷ் 7 ரன்களில் வெளியேறினார்.

இதற்கு அடுத்து ஜோடி சேர்ந்த கேப்டன் நிதி ராணா மற்றும் ரிங்கு சிங் இருவரும் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். இந்த ஜோடி 61 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது. நிதிஷ் ரானா 42 ரன்களில் ஆட்டம் இழந்தார்.

இதற்கு அடுத்து வந்த ரசல் 24, சுனில் நரைன் 1, சர்துல் தாக்கூர் 8 ரன்களில் ஆட்டம் இழந்தார்கள். 19 ஓவர்களில் ஏழு விக்கெட்டுகள் இழப்புக்கு 168 ரன்கள் கொல்கத்தா எடுத்திருந்தது. களத்தில் ரிங்கு சிங் மற்றும் அனுகுல் ராய் இருவரும் இருந்தார்கள்.

- Advertisement -

இந்த நிலையில் இருபதாவது ஓவரை வீச வந்த தமிழக வீரர் நடராஜன் முதல் பந்தை ரன் இல்லாமல் வீசி இரண்டாவது பந்தில் அபாயகரமான பேட்ஸ்மேன் ரிங்கு சிங்கை வெளியேற்றினார். இதற்கு அடுத்த பந்தில் ஹர்ஷித் ராணாவை ரன் அவுட் செய்தார். இதற்கு அடுத்த பந்தை அனுகுல் ராய்க்கு ரன் இல்லாமல் வீசி, அடுத்த பந்தில் ஒரு ரன்னும், அதற்கு அடுத்த பந்தில் இரண்டு ரன் மட்டுமே தந்தார்.

கொல்கத்தா அணி 180 ரன்களை தாண்ட இருந்த நிலையில் கடைசி ஓவரில் இரண்டு விக்கட்டுகளை வீழ்த்தி 171 ரன்களுக்குள் கட்டுப்படுத்தினார். மேலும் இதற்கு முன்னால் வீசிய ஓவரில் சர்துல் தாக்கூர் விக்கட்டை வீழ்த்தியிருந்தார். இந்த ஆட்டத்தில் மொத்தமாக நான்கு ஓவர்கள் பந்து வீசி 30 ரன்கள் தந்து முக்கியமான இரண்டு விக்கெட்டை வீழ்த்தி ஹைதராபாத் அணிக்கு ஒரு முன்னிலையை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார்!