NZvsPAK.. 9ஓவர் 97ரன் 2விக்கெட்.. பரிதாபமாக தோற்ற பாகிஸ்தான்.. நியூசிலாந்து மீண்டும் வெற்றி

0
191
Pakistan

தற்பொழுது பாகிஸ்தான் கிரிக்கெட் அணி ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுவதற்கு நியூசிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் செய்திருக்கிறது.

இந்தத் தொடரை பாகிஸ்தான் அணி புதிய கேப்டன் ஷாகின் ஷா அப்ரிடி தலைமையில் விளையாடுகிறது. நியூசிலாந்து டி20 கிரிக்கெட்டுக்கு மீண்டும் கேப்டனாக பேட்மேனாக கேன் வில்லியம்சன் திரும்பியிருக்கிறார்.

- Advertisement -

இந்த நிலையில் இந்த தொடரின் முதல் போட்டியில் நியூசிலாந்து அணி அபாரமான முறையில் பேட்டிங் செய்து 226 ரன்கள் குவித்து வெற்றி பெற்றது. பாகிஸ்தானுக்கு எதிராக தனது அதிகபட்ச டி20 டோட்டலை பதிவு செய்தது.

இந்த நிலையில் இன்று தொடரின் இரண்டாவது போட்டி நடைபெற்றது. இந்த போட்டிக்கான டாசில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

கடந்த போட்டியில் ஷாகின் அப்ரிடியின் ஒரே ஓவரில் 24 ரன்கள் குவித்த பின் ஆலன் இந்த முறையும் தனது அதிரடியை அப்படியே தொடர்ந்தார். அவர் 41 பந்துகளில் 7 பவுண்டரிகள் மற்றும் ஐந்து சிக்ஸர்கள் உடன் 74 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.

- Advertisement -

இவருக்கு பிறகு கான்வே 20, வில்லியம்சன் 26, டேரில் மிட்சல் 17, கிளன் பிலிப்ஸ் 13, மிட்சல் சான்ட்னர் 25 என ரன்கள் எடுக்க 20 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி எட்டு விக்கெட் இழப்புக்கு 194 ரன்கள் சேர்த்தது. பாகிஸ்தான் தரப்பில் ஹாரிஸ் ரவுப் 3 மற்றும் அப்பாஸ் அப்ரிடி இரண்டு விக்கெட் கைப்பற்றினார்கள்.

இதற்கடுத்து இலக்கை நோக்கி விளையாடிய பாகிஸ்தான் அணிக்கு துவக்க ஆட்டக்காரர்கள் சய்ம் அயுப் 1 மற்றும் முகமது ரிஸ்வான் 7 ரன்கள் என இந்த முறை ஏமாற்றம் அளித்தார்கள்.

இதற்குப் பிறகு ஜோடி சேர்ந்த முன்னாள் கேப்டன் பாபர் அசாம் மற்றும் அதிரடி வீரர் பகார் ஜமான் இருவரும் மிகச் சிறப்பான பேட்டிங் மூலம் பாகிஸ்தான் அணியை மீட்டார்கள். பகார் ஜமான் 25 பந்துகளில் மூன்று பவுண்டரிகள் மற்றும் ஐந்து சிக்ஸ்ர்கள் உடன் 50 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.

9.3 ஓவர்களில் 97 ரன்கள் 2 விக்கெட்டுகள் என்று வலிமையாக இருந்த பாகிஸ்தான் அதற்குப் பிறகு அப்படியே சரிந்தது. பாபர் அசாம் ஒரு முனையில் கடுமையாக போராடி 43 பந்துகளில் 7 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் உடன் 66 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். கடைசி நேரத்தில் ஷாகின் அப்ரிடி 13 பந்தில் 22 ரன்கள் சேர்த்தார்.

இறுதியாக பாகிஸ்தான அணி 19.3 ஓவர்களில் 173 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. நியூசிலாந்து அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் இரண்டாவது போட்டியிலும் வெற்றி பெற்று தொடரில் முன்னிலை வகிக்கிறது. மேலும் நியூசிலாந்து பந்துவீச்சில் ஆடம் மில்னே நான்கு ஓவர்களுக்கு 33 ரன்கள் தந்து நான்கு விக்கெட் கைப்பற்றி வெற்றிக்கு முக்கிய காரணமாக விளங்கினார்.