நியூசிலாந்தை பந்தாடிய இலங்கை பேட்ஸ்மேன்கள், முதல் நாள் ஆட்டத்தில் 305 ரன்கள்.. இந்தியாவிற்கு எந்த வகையில் சிக்கல்? உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு செல்லவதை எவ்வாறு பாதிக்கும்?

0
281

நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில், இலங்கை அணி முதல்நாள் முடிவில் 305 ரன்கள் அடித்துள்ளது. இது இந்திய அணிக்கு எந்த வகையில் பாதிக்கும் என்பதை பின்வருமாறு பார்ப்போம்.

பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் விளையாடி வரும் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் தற்போது வரை முன்னிலை வகிக்கிறது. கடைசி டெஸ்ட் போட்டி அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

- Advertisement -

இந்த 4வது போட்டியில் இந்திய அணி கட்டாயம் வெற்றி பெற்றால் நேரடியாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுவிடும். ஒருவேளை தோல்வியுற்றால், தற்போது நடைபெற்று வரும் இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முடிவுகள் பொறுத்து இந்திய அணி தகுதி பெறுமா? இல்லையா? என்பதை முடிவு செய்யும் நிலை ஏற்பட்டு விடும்.

நியூசிலாந்து அணி இரண்டு டெஸ்டில் ஒன்றை வெற்றி பெற்றால் போதுமானது. வெற்றி சதவீதம் அடிப்படையில் இலங்கை அணியால் இந்தியாவை கடக்க முடியாது. நேரடியாக இந்திய அணிக்கு சாதகமாக மாறிவிடும்.

இரண்டு டெஸ்டிலும் இலங்கை அணி வெற்றி பெறும் பட்சத்தில், நேரடியாக இலங்கை அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்று விடும்.

- Advertisement -

இப்படியொரு நிலையில் இலங்கை அணி நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்து அபாரமாக ரன் குவிப்பிலும் ஈடுபட்டது.

இலங்கை அணியின் கேப்டன் கருணரத்தினே(50) அரைசதம் அடித்து ஆட்டம் இழந்தார். இவருடன் சேர்ந்து பார்ட்னர்ஷிப் அமைத்து வந்த குஷால் மேண்டீஸ் 87 ரன்கள் அடித்து ஆட்டம் இழந்தார். அடுத்ததாக உள்ளே வந்த முன்னாள் கேப்டன்கள் ஆஞ்சிலோ மேதியுஸ் 47 ரன்களும், சந்திமால் 39 ரன்களும் அடித்து அவுட்டாகினர்.

முதல் நாள் முடிவில் இலங்கை அணி 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 305 ரன்கள் அடித்திருக்கிறது. போட்டியை வென்றாக வேண்டும் என்கிற கட்டாயத்தில் களம் இறங்கியுள்ள இலங்கை அணி வீரர்கள் அவ்வபோது நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்து அணியின் ஸ்கோரை உயர்த்துவதற்கு உதவி வருகின்றனர். இந்திய அணிக்கு இது தலைவலியை கொடுத்திருக்கிறது.

அதேநேரம் அகமதாபாத் டெஸ்ட் போட்டியில் விளையாடி வரும் இந்திய அணி, முதல் நாள் ஆட்டத்தின் தேநீர் இடைவெளியை நெருங்கும் நேரத்தில், வெறும் இரண்டு விக்கெட்டுகளை மட்டுமே வீழ்த்தியுள்ளது. துவக்க வீரர் கவாஜா அரைசதம் கடந்து விளையாடி வருகிறார். ஆஸ்திரேலியா அணி தற்போது 130 ரன்கள் கடந்து விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது.