சூப்பர் மேன் கேட்ச்.. நியூசிலாந்து வீரர் கிளென் பிலிப்ஸ் அசத்தல்.. நம்பவே முடியாத ஆஸி பேட்ஸ்மேன்

0
324

நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து வீரர் பிலிப்ஸ், ஆஸ்திரேலிய அணி வீரர் மார்னஸ் லபுஷேனின் கேட்சை பிடித்தது சிறந்த கேட்சிகளில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.

ஆஸ்திரேலிய அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் நிலையில், 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை வெற்றி பெற்று தற்போது டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் டெஸ்டிலும் ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்று இரண்டாவது போட்டி ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

- Advertisement -

இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பந்து வீசுவதாக அறிவிக்க, பேட்டிங் தொடங்கிய நியூசிலாந்து அணிக்கு தொடக்க ஆட்டக்காரர் டாம் லதாம் மட்டுமே சற்று ஆறுதல் அளிக்கும் வகையில் விளையாடினாலும், மற்ற வீரர்கள் சொற்பரன்களில் ஆட்டம் இழந்ததால் நியூசிலாந்து அணி 162 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது. டாம் லதாம் அதிகபட்சமாக 38 ரன்கள் குவித்தார்.

வேகப்பந்து வீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்திய இந்த டெஸ்ட் போட்டியில், ஹேசில்வுட் ஐந்து விக்கெட்டுகளும், ஸ்டார்க் மூன்று விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்கள். பின்னர் தனது முதல் இன்னிங்சைத் தொடங்கிய ஆஸ்திரேலியா அணிக்கு நியூசிலாந்து பந்துவீச்சாளர்களும் நெருக்கடியைக் கொடுத்தார்கள். இவர்களின் பந்துவீச்சினை சமாளிக்க முடியாமல் ஆஸ்திரேலியா அணி பேட்ஸ்மேன்களும் சொற்ப ரன்களில் ஆட்டம் இழக்க, தனது ஐம்பதாவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் லபுஷேன் மட்டுமே நிதானமாக களத்தில் நின்று விளையாடினார்.

90 ரன்கள் குவித்த நிலையில் சதம் அடித்து அசத்துவார் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்த போது நியூசிலாந்து அணியின் கேப்டன் டிம் சவுதி வீசிய பந்தை லபுஷன் கட் ஷாட் அடிக்க முயல, ஸ்லிப்பில் நின்று கொண்டிருந்த பிலிப்ஸ் அதனை டைவ் அடித்து அபாரமாக கேட்ச் செய்தார். யாருமே எதிர்பார்க்காத நேரத்தில் கண் இமைக்கும் நொடி பொழுதில் மிக வேகமாக வந்த பந்தை சிறப்பாக கேட்ச் செய்து அசத்தினார். இதனைக் கண்ட லபுஷேன் நம்பவே முடியாத வகையில் தனது அதிருப்தியை வெளிப்படுத்தி விட்டு களத்தில் இருந்து வெளியேறினார்.

- Advertisement -

இது டெஸ்ட் போட்டிகளில் சிறந்த கேட்ச்களில் ஒன்றாகப் பார்க்கப்படுகிறது. எனவே ஆஸ்திரேலியா அணி தனது முதல் இன்னிங்ஸில் 256 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. பின்னர் தனது இரண்டாவது இன்னிசை தொடங்கிய நியூசிலாந்து அணிக்கு தொடக்க ஆட்டக்காரர் வில் யங் ஒரு ரன்னில் ஆட்டம் இழக்க, லதாம் மற்றும் வில்லியம்சன் ஆகியோர் களத்தில் இருக்கின்றனர்.

இதையும் படிங்க: INDvsENG.. 147 கிரிக்கெட் வரலாற்றில்.. நாளை முதல்முறையாக நடக்க போகும் கிரேட் சாதனை

இன்னும் மூன்று நாட்கள் ஆட்டம் எஞ்சி இருக்கும் நிலையில் இந்த போட்டி நிச்சயமாக டிராவினை நோக்கி செல்ல வாய்ப்பில்லை என்றே கருதப்படுகிறது. எனவே இப்போட்டியிலும் ஆஸ்திரேலியா அணி வெற்றி பெறவே அதிக வாய்ப்பு இருப்பதாக ரசிகர்கள் கருதுகின்றனர்.