இப்படியும் நடக்குமா..? டெஸ்ட் கிரிக்கெட்டில் 65 பந்தில் 100 ரன்கள் விட்டுக்கொடுத்த நியூசிலாந்து பவுலர்..!

0
2079

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்சில் 65 பந்துகளில் 100 ரன்களை விட்டுக்கொடுத்து பவுலிங்சில் மோசமான சாதனை படைத்திருக்கிறார் நீல் வாக்னர்.

நியூசிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடிக் கொண்டிருக்கிறது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி பே ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

- Advertisement -

போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 325 ரன்கள் அடித்து டிக்ளர் செய்தது. அதைத் தொடர்ந்து முதல் இன்னிங்ஸில் விளையாடிய நியூசிலாந்து அணி 306 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

19 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்சை தொடர்ந்த நியூசிலாந்து அணி வழக்கம் போல தங்களது அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி நியூசிலாந்து பவுலர்களை துவம்சம் செய்தது. ரூட், ஹாரி ப்ரூக்ஸ் மற்றும் ஃபோக்ஸ் ஆகியோர் அரைசதங்கள் அடித்தனர்.

பின்னர் வந்த வீரர்களும் 30 முதல் 40 ரன்கள் அடித்து தங்களது பங்களிப்பை கொடுக்க, இங்கிலாந்து அணி 2வது இன்னிங்சில் 374 ரன்கள் அடித்தது. 2வது இன்னிங்சில நியூசிலாந்து அணியின் வேகப்பந்துவீச்சாளர் நீல் வாக்னர், வெறும் 13 ஓவர்களில் 110 ரன்கள் விட்டுக் கொடுத்தார்.

- Advertisement -

நீல் வாக்னர் வெறும் 65 பந்துகளில் 100 ரன்களை விட்டுக் கொடுத்தார். இதன் மூலம் டெஸ்ட் போட்டியில் விரைவாக நூறு ரன்களை விட்டுக்கொடுத்த பவுலர் என்கிற மோசமான சாதனையில் இடம் பிடித்தார். இவர் அந்த பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருக்கிறார்.

2009ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா வீரர் ப்ரைஸ் மேக்கேன் என்பவர் தென்னாபிரிக்க அணிக்கு எதிராக 63 பந்துகளில் 100 ரன்கள் விட்டுக் கொடுத்தது. இதுதான் தற்போது வரை அதிவிரைவாக 100 ரன்களை விட்டுக் கொடுத்த சாதனையாக இருக்கிறது.

பின்னர், 394 ரன்கள் இலக்கை சேஸ் செய்த நியூசிலாந்து அணி இரண்டாவது இன்னிங்சில் 63 ரன்கள் மட்டுமே எடுத்து ஐந்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. ஸ்டுவர்ட் பிராட் 4 விக்கெட்டுகளையும் ராபின்சன் ஒரு விக்கெட்டும் எடுத்துள்ளனர்.