ஒரு விக்கெட் தான் பாக்கி ; 6 பந்தில் 20 ரன்கள் தேவை ! அதிரடியாக பினிஷ் செய்த்த நியூசிலாந்து வீரர் பிரேஸ்வெல் ! விரக்தியில் அயர்லாந்து வீரர்கள்

0
281
Bracewell 127 vs Ireland

நியூசிலாந்து அணி அயர்லாந்து நாட்டிற்குச் சுற்றுப்பயணம் செய்து ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. இந்தத் தொடரின் முதல் போட்டி இன்று டப்ளின் நகரில் துவங்கியது. டாஸில் வென்ற நியூசிலாந்து முதலில் பந்துவீச்சை தேர்ந்தெடுத்தது. நியூசிலாந்து அணியில் கிளென் பிலிப்ஸ், பின் ஆலன் அறிமுகம் ஆனார்கள்.

அயர்லாந்து அணிக்குத் துவக்கம் தர வந்த கேப்டன் பால்போர்னியும், அனுபவ வீரர் பால் ஸ்டிரிலிங்கும் சீக்கிரத்தில் வெளியேறினார்கள். அடுத்து களம் புகுந்த ஹாரி டெக்டர் மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இவருடன் கைகோர்த்த ஆன்டி மெக்பிரின், ஹேம்ப்ஹர் ஆகிய இருவரும் 39, 43 ரன்களை எடுத்து ஒத்துழைப்பு தந்தனர்.

- Advertisement -

ஒருமுனையில் தேவைக்க்கு ஏற்றபடி மிகச்சிறப்பாக விளையாடிய ஹாரி டெக்டர் சதம் அடித்தார். 117 பந்துகளில் 14 பவுண்டரி, 3 சிக்ஸரோடு 113 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இறுதியில் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் அயர்லாந்து அணி 9 விக்கெட் இழப்பிற்கு 300 ரன்களை குவித்தது.

இதற்குப் பிறகு களமிறங்கிய நியூசிலாந்து அணியில் துவக்க ஆட்டக்காரர் மார்டின் கப்தில் மட்டுமே 51 ரன் அடித்தார். ஆனால் அடுத்து வந்த பின் ஆலன், வில் யங், டாம் லாதம், ஹென்ரி நிக்கோலஸ், கிளென் பிலிப்ஸ் என யாருமே நிலைக்கவில்லை. இதனால் 30 ஓவர்களில் ஆறு விக்கெட் இழப்பிற்கு 153 ரன்கள் என்று நெருக்கடியில் சிக்கியத நியூசிலாந்து அணி.

ஆனால் ஒருமுனையில் அதிரடியில் ஈடுபட்ட மிட்சல் பிரேஸ்வெல் பேட்டிங்கில் மிரட்டினார். அவரது பேட்டிலிருந்து பவுண்டரிகளும் சிக்ஸர்களுமாய் பறந்தது. மற்ற கடைநிலை பேட்ஸ்மேன்களை வைத்துக்கொண்டு சிறப்பாக ஆடி சதமும் அடித்தார்.

- Advertisement -

இறுதியில் ஒன்பது விக்கெட் இழப்பிற்கு 49 ஓவரில் 281 ரன்களை நியூசிலாந்து அணி எடுத்திருந்தது. கடைசி ஓவரில் வெற்றிக்கு 20 ரன்கள் தேவைப்பட்டது. அந்த ஓவரை அயர்லாந்தின் கிரேஜ் யங் வீச பிரேஸ்வெல் பேட்டிங்கில் இருந்தால். முதல் இரண்டு பந்துகளில் பவுண்டரி அடித்த பிரேஸ்வெல் அடுத்த பந்தில் சிக்ஸரும், அதற்கடுத்த இரு பந்துகளில் பவுண்டரும் சிக்ஸரும் விளாசி ஒரு பந்து மீதமிருக்க நியூசிலாந்து அணியை வெல்ல வைத்துவிட்டார். 82 பந்துகளைச் சந்தித்த பிரேஸ்வெல் பத்து பவுண்டரி, ஏழு சிக்ஸர்களோடு 127 ரன்கள் குவித்து ஆட்டநாயகன் விருதும் பெற்றார். ஒருநாள் கிரிக்கெட் போட்டி வரலாற்றில் இறுதி ஓவரில் 20 ரன்கள் அடித்து ஒரு அணி வெற்றி பெறுவது இதுதான் முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது!