6,W,W,W… கடைசி ஓவரில் நடந்த ட்விஸ்ட்.. நியூசிலாந்து அணி திரில் வெற்றி!

0
636

பரபரப்பாக நடந்த இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான டிசைடர் போட்டியில் நியூசிலாந்து அணி கடைசி ஓவரில் திரில் வெற்றியை பெற்றுள்ளது.

நியூசிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடர்களை முடித்துவிட்டு, டி20 தொடரில் விளையாடியது இலங்கை அணி. முதல் டி20ல் நியூசிலாந்து அணியும், இரண்டாவது டி20ல் சூப்பர் ஓவரில் இலங்கை அணி வென்றதால் தொடர் சமனில் இருந்தது.

- Advertisement -

3ஆவது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று நடந்தது. இதில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணிக்கு நிஷன்கா மற்றும் குஷால் மெண்டிஸ் இருவரும் சிறப்பான துவக்கம் கொடுத்தனர். அதிகபட்சமாக, குஷால் மெண்டிஸ் 73(48) ரன்கள் மற்றும் குஷால் பேரரா 33(21) ரன்கள் அடித்து அசத்தினர்.

20 ஒவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 182 ரன்கள் அடித்தது. பென் லிஸ்டர் 2 விக்கெட்டுகள், மில்னே மற்றும் இஷ் சோதி தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

183 ரன்கள் இலக்கை துரத்திய நியூசிலாந்து அணிக்கு பவுஸ் மற்றும் செய்பர்ட் நல்ல துவக்கம் அமைத்தனர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 53 ரன்கள் சேர்த்தது. பவுஸ் 17 ரன்களுக்கு அவுட்டானார்.

- Advertisement -

அடுத்து உள்ளே வந்த கேப்டன் டாம் லேத்தம் 31 ரன்கள் அடித்து அவுட்டானார். 2ஆவது விக்கெட்டுக்கு டாம் லேத்தம் மற்றும் செய்பர்ட் ஜோடி 84 ரன்கள் சேர்த்தது. அபாரமாக விளையாடி வந்த செய்பர்ட், 48 பந்துகளில் 88 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார்.

கடைசி ஓவர் வரை சென்ற ஆட்டத்தில், 20ஆவது ஓவரில் நியூசிலாந்து அணியின் வெற்றிக்கு 10 ரன்கள் தேவைப்பட்டது. களத்தில் சாப்மேன் மற்றும் டெரல் மிட்ச்சல் இருவரும் இருந்தனர்.

முதல் பந்தில் சாப்மேன் சிக்ஸர் அடித்தார். பின்னர் சாப்மேன்(16) விக்கெட்டை தூக்கினார் லஹிரு குமாரா, அடுத்த பந்து ஒயிடு சென்றதால் ஓடமுயற்சித்த நீசம்(0) ரன் அவுட் ஆனார். 3ஆவது பந்தில் டெரல் மிட்ச்சல்(15) விக்கெட்டையும் எடுத்தார் குமாரா.

ஆட்டத்தின் பரபரப்பு உச்சத்திற்கு சென்றது. கடைசி 3 பந்துகளில் 3 ரன்கள் தேவைப்பட்டது. ரவீந்திரா மற்றும் மில்னே இருவரும் அடித்துக் கொடுத்ததால் நியூசிலாந்து அணி 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 183 ரன்கள் அடித்து 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது. கடைசியில் 2-1 என்கிற கணக்கில் தொடரையும் கைப்பற்றியது.